மாந்தி ஒரு உபகிரகம். உப கிரகம் என்பது நவ கிரகங்களின் புதல்வர்கள். அவர்கள் 9 பேர். இதில் குளிகாதியர் 4 பேர். தூமாதியர் 5 பேர். குளிகாதியர்களில் குளிகன் சனியின் புதல்வன். யமகண்டன் குருவின் புதல்வன். அர்த்த ப்ரகாரன் புதனின் புதல்வன். காலன் சூர்யனின் புதல்வன்.
தூமாதியர்களில் தூமன் செவ்வாயின் புதல்வன். வ்யதீபாதன் ராகுவின் புதல்வன். பரிவேடன் சந்த்ரனின் புதல்வன்.இந்த்ர தனுசு சுக்கிரனின் புதல்வன். தூமகேது கேதுவின் புதல்வன். தூமகேதுவை துகஜன் என்றும் அழைப்பர். செவ்வாயின் மற்றொரு புதல்வன் மிருத்யு.
குளிகனை மாந்தி என்றும் அழைப்பர். ஆட்சி வீடு: மாந்திக்கு கும்பம்; யமகன்டனுக்கு தனுஸு. அர்தப்ரகாரனுக்கு மிதுனம். காலனுக்கு மகரம்; ம்ரித்யுவிற்கு வ்ரிச்சிகம்.
தூமனுக்கு உச்ச வீடு சிம்மம். வ்யதீ பாதனுக்கு வ்ரிச்சிகம்; பரிவேடனுக்கு மிதுனம். இந்த்ர தனுசுக்கு தனுஸு. தூமகேதுவிற்கு கும்பம். இந்த உப கிரகங்களுக்கான பலன்கள் அறிய முடியும்.
மாந்தி ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2,4,7,8,12 வீடுகளில் இருந்தால் அந்த ஜாதகர் வீட்டில் துர் மரணம் நடந்துள்ளது என்று அறிய முடியும்.
மாந்தி எந்த லக்னத்தில் உள்ளதோ அந்த லக்னத்தில் சுப கார்யங்கள் திருமணம் முதலியன செய்ய கூடாது. மாந்தி உதயமாகும் நேரத்திலும் சுப கார்யங்கள் செய்ய கூடாது.
.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks