வேதம் - உபநிஷதங்கள் Part 1

இந்த ஆரண்யகங்களுக்கு முடிவிலேதான் உபநிஷதங்கள் வருகின்றன. ஸம்ஹிதை மரம் என்றால், அதற்கு பிரமாணம் பூ, ஆரண்யகம் காய், உபநிஷந்தான் முடிவான பழம் (பலம்-பலன்) . ஞானமார்க்கத்திலே ஜீவாத்ம பரமாத்ம அபேதத்தை ஸாதித்துக் கொடுப்பதற்காக ஏற்பட்ட நேர் ஸாதனம் உபநிஷத்துதான். இதில் நம்மைச் சேர்ப்பதற்கே ஸம்ஹிதையும், பிராம்மணமும் ஆரண்யகமும் இருக்கின்றன. உபநிஷத்துக்களில் பலதரப்பட்ட வித்யைகள், யக்ஞங்கள், தேவதா உபாஸனைகள் அங்கங்கே சொல்லியிருந்தாலும், முக்கியமாக அது தத்வ விசாரம்தான்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsகர்மா எல்லாம் விட்டுப் போகிற நிலையைச் சொல்வதுதான் உபநிஷதங்களின் பரம தாத்பரியம். இதை வைத்துத்தான் வேதத்தையே கர்மகாண்டம், என்று இரண்டாக பிரித்திருக்கிறது. இதையே (முறையே) பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை என்று சொல்வதுண்டு.


கர்ம காண்டத்தை ஆராய்ச்சி பண்ணி, அதுவே முடிந்த முடிவான பலன் என்று ஜைமினி மஹரிஷி செய்திருக்கிற சாஸ்திரத்துக்குப் "பூர்வ மீமாம்ஸை"என்று பெயர் இம்மாதிரியே ஞானகாண்டத்தை விஸாரித்து அதையே பரம தாத்பரியமாக முடிவு பண்ணி, வியாஸர் செய்த பிரம்ம ஸத்ரம் "உத்தர மீமாம்ஸை"எனப்படுகிறது. கர்ம காண்டத்தோடு பார்க்கும்போது, உபநிஷத் பாகமான ஞானகாண்டம் ரொம்பச் சின்னதுதான். இதற்கேற்பவே ஜைமினி ஸத்ரம் ஆயிரம் ஸெக் ஷன் கொண்ட, "ஸஹஸ்ர அதிகரணி"யாகவும், பிரம்ம ஸத்ரம் இருநூறுக்கும் குறைவான அதிகாரணமுள்ளதாகவும் இருக்கின்றன. ஒரு விருக்ஷத்தில் இலைகள் நிறைய இருந்தாலும் புஷ்பமும் பழமும் கொஞ்சமாகவே இருக்கிறார்போல், வேத விருக்ஷத்தில் கர்மகாண்டம் நிறையவாகவும், உபநிஷத் பாகம் கொஞ்சமாகவும் இருக்கிறது.

உபநிஷத்தின் தத்வ விசாரம் என்பது இதர தேசங்களில் ஃபிலாஸஃபிகாரர்கள் புத்தி பூர்வமாக ரொம்பவும் ஆழமாக ஸத்யத்தை ஆராய்கிற மாதிரி மட்டும் முடிந்து விடவில்லை. புத்தியினால் ஆராய்ந்ததை அநுபவத்தில் தெரிந்து கொள்வதுதான் முக்கியம். ஹல்வா தித்திக்கிறது என்று தெரிந்து கொண்டால் மட்டும் என்ன பிரயோஜனம்?அதைச் சாப்பாடுத் தித்திப்பை அநுபவிக்க வேண்டும். மற்ற ஃபிலாஸஃபிகளுக்கு இல்லாமல் உபநிஷதங்களுக்கு மாத்திரம் இருக்கிற பெருமை, அது மந்திராக்ஷரங்களைக் கொண்டதாதலால் எந்த தத்வங்களைச் சொல்கிறதோ அதை மந்திர சப்தத்தின் சக்தியால் அநுபவத்துக்குக் கொண்டு வந்து கொடுத்து விடுகிறது. மற்ற தேசத்து ஃபிலாஸஃபிகள் போல் வெறும் அறிவாராய்ச்சியாக அதை அநுபவத்தில் உறைக்கும்படியாகப் பண்ணுவதற்கு எப்பேர்ப்பட்ட வாழ்முறை வேண்டுமோ அப்பேர்ப்பட்ட தர்மங்கள் நிறைந்த ஒழுக்கமான வாழ்க்கையை வேதத்தின் கர்மகாண்டம் சொல்லியிருக்கிறது. அதன்படி வாழ்ந்து, தன்னைச் சுத்தப் படுத்திக் கொண்டு, அப்புறம் கர்மாக்களை விட்டுவிட்டு, இந்த உபநிஷத்துக்களை ஒருத்தன் அநுஸந்தானம் பண்ணும்போது, அதிலுள்ள தத்வங்கள் வெறும் புத்திவாதமாக இல்லாமல் அவனுடைய அநுஷ்டானத்திலேயே ஜீவனோடு பிரகாசிக்கின்றன. இந்த தத்வங்களுக்கெல்லாம் உச்சியில்தான் ஜீவப் பிரம்ம அபேதம் இருக்கிறது.

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டறக் கலக்கும் அந்த உச்சஸ்தானத்தைப் பிடிப்பதற்காகத்தான், ஸகல கர்மாக்களால் பக்குவம் பெற்ற ஒருத்தன், ஸகல கர்மங்களையும் விட்டுவிட்டு ஸந்நியாஸம் வாங்கி கொள்வது. அப்படி வாங்கி கொள்கிற ஸமயத்தில் அவனுக்கு மஹா வாக்யங்கள் என்று நாலு மந்திரங்கள் உபதேசிக்கப் படுகின்றன. இந்த நாலும் ஜீவப்பிரம்ம அபேதத்தைச் சொல்லுபவையே. அவற்றை மனனம் பண்ணி, நிதித்யாஸனம் என்ற பெயரில் ஆழ்ந்து தியானம் செய்தால், அபேத நிலை பிரத்யக்ஷமாகவே ஸித்தித்து விடும்.


Contd.....Part 2........
Source; subadra