Announcement

Collapse
No announcement yet.

வேதம் - உபநிஷதங்கள் – Part 2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதம் - உபநிஷதங்கள் – Part 2

    வேதம் - உபநிஷதங்கள் – Part 2

    இப்படிப்பட்ட நாலு மஹாவாக்கியங்களும் நாலு உபநிஷத்துக்களில்தான் இருக்கின்றன. எத்தனையோ கர்மா, தினுசு தினுசான பிரார்த்தனை, வாழ்க்கை விதிகள் எல்லாம் ஸம்ஹிதை, பிராம்மணம் முதலான பாகங்களில் இருந்தாலும், முடிந்த முடிவாகப் பரம லக்ஷ்யத்தைப் பிடிக்க வேண்டும் என்று வருகிறபோது, அதை ஸாதித்துக் கொடுப்பதாக இருப்பது உபநிஷத் மஹாவாக்கியங்கள்தான் .

    "உயர்ந்த அநுபவ ஞானமேதான் பிரம்மம்"என்ற தாத்பரியத்தில் ஐதரேய உபநிஷத்தில் ஒரு மஹாவாக்கியம் இருக்கிறது. இது ரிக்வேதத்தைச் சேர்ந்த உபநிஷத்து. "நான் பிரம்மமாக இருக்கிறேன்"எனறு அர்த்தமுள்ள ஒரு மஹாவாக்கியம் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருகிறது. இது யஜுர் வேதத்தைச் சேர்ந்தது. "நீயும் பரமாத்மாவும் ஒன்றுதான்" என்று சிஷ்யனுக்கு குரு உபதேசிக்கிற ரூபத்தில் சாந்தோக்ய உபநிஷத்திலே ஒரு மஹா வாக்கியம் இருக்கிறது. இதுதான் ஸாம வேதத்துக்கான மகா வாக்கியம். இந்த ஆத்மா என்பது பிரம்மமேதான் என்று சொல்கிற மஹாவாக்யம், மாண்டூக்ய உபநிஷத்தில் வருகிறது. இது அதர்வ வேதத்தைச் சேர்ந்த உபநிஷத்துக்களிலேயே வருகின்றன.

    ஆசார்யாள், கடைசியில் உபதேச ஸாரமாகச் சொன்ன "ஸோபான பஞ்சக"த்தில், வேதத்தை (ஸம்ஹிதையை) அத்யயனம் பண்ணுங்கள், அதில் (பிராம்மணத்தில்) சொல்லியுள்ள எல்லா கர்மாக்களையும் பண்ணுங்கள் என்று ஆரம்பித்து, இந்த மஹாவாக்யங்களில் உபதேசம் வாங்கிக் கொண்டு, அவற்றையே அநுஸந்தானம் செய்து பிரம்ம பாவத்தை அடையுங்கள் என்று முடிக்கிறார்.

    அத்தனை வேதங்களுக்கும் முடிவான நிலை உபநிஷத்தில் சொன்னதுதான். உபநிஷத்துக்களுக்கே "வேதாந்தம்"என்ற பெயர் இருக்கிறது. அந்தம் என்றால் முடிவு;வேதத்துக்கு அந்தமாக இருப்பது வேதாந்தம்.

    உபநிஷத்துக்கள் இரண்டு விதத்தில் வேதத்துக்கு முடிவாக இருக்கின்றன. ஒவ்வொரு சாகையை எடுத்துக் கொண்டாலும் முதலில் ஸம்ஹிதை, அப்புறம் பிராம்மணம், பிறகு ஆரண்யகம் என்று வந்து, அந்த ஆரண்யகத்தின் கடைசியில் உபநிஷத்து வருகிறது. அதனால் ஒவ்வொரு சாகைக்கும் முடிவாக இருக்கிறது. அதோடுகூட வேதங்கள் சொல்லும் தாத்பரியத்துக்கும் முடவாக, லக்ஷ்யமாக இருப்பது உபநிஷத்துக்கள்தான். இப்படியாக புஸ்தகங்களில் அமைப்பு ( order of texts) , தாத்பரியம் என்ற இரண்டு விதத்திலும் வேதங்களுக்கு முடிவாக இருப்பவை உபநிஷத்துக்கள். ஊருக்குக் கோயில், கோயிலுக்குக் கோபுரம், கோபுரத்துக்கு சிகரம் என்று உயர்ந்துகொண்டே போகிற மாதிரி, நம்முடைய தத்துவங்களுக்கு சிகரமாக, வேத முடிவாக இருப்பது உபநிஷத்துக்களே.
    'உப-நி-ஸத' என்றால் பக்கத்திலே உட்கார்ந்து கொள்வது என்று அர்த்தம். சிஷ்யனை இப்படி உட்கார்த்திவைத்துக் கொண்டு குருவானவர் செய்த உபதேசம்தான் உபநிஷத்துக்கள். பிரம்மத்துக்கு ப் பக்கத்திலேயே போய்ச் சேரும்படியாகச் செய்வது என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். உபநயனம் என்றால், 'குருவிடம் கொண்டுவிடுவது', 'பரமாத்மாவிடம் கொண்டு விடுவது' என்று இரண்டு விதமாகவும் அர்த்தம் பண்ணிக் கொள்ள இருப்பதுபோல, உபநிஷத் என்றாலும் இப்படி இரட்டைப் பொருள் கொள்ளலாம்.

    பக்கத்தில் வைத்துக் கொண்டு செய்கிற உபதேசம் என்றால். அது ரஹஸ்யமானது என்று அர்த்தம். மதிப்புத் தெரியாத அபக்குவிகளுக்கு அது சொல்லத் தக்கதல்ல. இதனால்தான் உபநிஷத்துக்களுக்குள்ளேயே கதா பாகங்களாக இல்லாமல் ரொம்பவும் ஸ¨க்ஷ்மமான தத்தவங்களைச் சொல்கிறபோது, 'இது உபநிஷத், இது உபநிஷத்'என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும். வேதத்தில் மறை பொருளாக இருக்க வேண்டியவற்றை 'ரஹஸ்யம்'என்பார்கள். வேதாந்தமான உபநிஷத்தில் அப்படிப்பட்ட ரஹஸ்யங்களையே 'உபநிஷத்'என்று சொல்லியிருக்கும்.
    Source: subadra
Working...
X