முறுக்கு கட்டாயம் செய்வோம் . மற்றும் ஒரு கார பக்ஷணம் செய்தால் நல்லது. நான் இங்கு சில செய்முறைகளை தருகிறேன் உங்களுக்கு பிடித்ததை செய்யவும்

தட்டை

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதேவையானவை:

1cup அரிசி மாவு ( களைந்து உலர்த்தி அரைத்து )
3sp வெண்ணை
2 -3sp உளுந்து பொடி (வறுத்து அரைத்து )
2 -3sp தேங்காய் துருவல்
2sp கடலை பருப்பு (ஊறவைத்து )
2sp மிளகாய்பொடி
1sp எள்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

மேல் கூறிய பொருட்களை ஒரு பேசினில் போட்டு, நன்கு கலக்கவும்.
பிறகு சிறிது தண்ணிவிட்டு கெட்டியாக பிசையவும்.
ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இல்லை துண்டில் எண்ணெய் தடவவும்.
சிறிதளவு மாவு எடுத்து தட்டை போல் தட்டவும்.
அது போல் 4 - 5 தட்டினதும்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
தட்டி வைத்துள்ள தட்டைகளை போடவும்.
நிதானமாக திருப்பவும்.
நன்கு வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவையும் இது போல் செய்யவும்.
கர கரப்பான தட்டை ரெடி.