இறுதி இலக்கு பரமாத்மா தான்

நாம அத்வைதத்த எடுத்துட்டாலும், த்வைதமா இருந்தாலும், விசிஷ்டாத்வைதமா இருந்தாலும் ஒரு ஜீவனுக்கு இறுதி இலக்கு பரமாத்மா தான். இதுல 'செகண்ட் தாட்'டே கிடையாது. ஆனா என்ன ஒவ்வொரு மார்க்கமும், ஒரு ஜீவாத்மா எப்படி, எந்தசூழ்நிலைல, என்ன வழிமுறைல பரமாத்மாவை அடையும்கறதுல வேறுபடறது.

இங்கே இருக்கற நிறைய பேர் கணிதம் படிச்சிருப்பீங்க என்ற நம்பிக்கைல சொல்றேன். மத்வாசார்யாரின் த்வைத மார்க்கம் கொஞ்சம் ஸ்ட்ரிட். சங்கரரின் அத்வைத மார்கத்துல பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு சதுரத்தின் பக்கத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு மாதிரி. அதாவது பக்கத்தை மிகச் சரியாக நாலு மடங்கு செய்தால் அதன் சுற்றளவு வந்து விடும். நான்கு என்பது ஒரு RATIONAL நம்பர். எந்த Ambiguityயும் கிடையாது.

ஆனால் த்வைத மார்க்கத்தில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு வட்டத்தின் விட்டத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு போன்றது.விட்டத்தை பை (Pi)மடங்கு பண்ணா அதன் சுற்றளவு வரும். ஆனால் நீங்க படிச்சிருப்பீங்க பை என்ற நம்பர் ஒரு Irrational number என்று. அதாவது அதை இரண்டு முழுஎண்களின் விகிதமாக எழுத முடியாது. இருபத்து இரண்டு bi ஏழு அப்படீங்கறது ஒரு approximation தான்.

பை (Pi) என்ற இந்த விகிதம் முடிவில்லாமல் அனந்தமாகப் போய்க்கொண்டே இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். மூணு புள்ளி ஒண்ணு நாலு அப்படீன்னு எழுதி அதற்குப் பிறகு கோடி கோடி இலக்கங்கள் போட்டாலும் பை (Pi) என்ற எண் முடிவு பெறாது. எனவே வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தைப் போல இத்தனை மடங்கு அப்படீன்னு சரியாக, உறுதியா சொல்லவே முடியாது. விட்டத்தின் எல்லை அதன் சுற்றளவு தான். சுற்றளவு என்பது ஒரு முழுமையான எண். வட்டத்தின் விட்டமும் ஒரு முழுமையான எண். ஆனால் இவை இரண்டின் விகிதம் ஒரு முற்றுப்பெறாத எண். விட்டம் தான் ஜீவாத்மா, சுற்றளவு தான் பரமாத்மா என்று எடுத்துக்கொண்டால் பரமாத்மா ஜீவாத்மாவின் இலக்கு என்றாலும் அது ஜீவனின் இத்தனையாவது படிநிலை என்று உறுதியாக சொல்ல முடியாது.

விட்டத்தின் ஏதோ ஒருமுடிவிலி மடங்கில் சரியாக வட்டத்தின் சுற்றளவு வரலாம். ஆனால் எத்தனை துல்லியமாக கணக்குப் போட்டாலும் (Pi)பையை கோடி தசம ஸ்தானம் வரை எடுத்துக்கொண்டாலும் விட்டத்தின் மடங்குக்கும் சுற்றளவுக்கும் ஒரு சிறிய மைன்யூட்வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும். அதே போல ஜீவனின் இலக்கு பரமாத்மா என்று சொன்னாலும் பரமாத்வை அடைய (பரமாத்மாவாக மாற) ஜீவாத்மா எண்ணிலாத, கணக்கற்ற படிகளை கடக்க வேண்டி இருக்கிறது. ஒரு ஜீவன் சாதனைகளை செய்து படிப்படியாக எவ்வளவு தான் முன்னேறினாலும் அது சுற்றளவை நெருங்கலாமே தவிர சுற்றளவாக மாற முடியாது.

த்வைதம் ஸ்ரீமன் நாராயணனை சுற்றளவாக நிர்ணயம்செய்கிறது. உலகின் எண்ணிறைந்த ஜீவன்கள் தான் வட்டத்தின் எண்ணிறைந்தவிட்டங்கள். விட்டம் சுற்றளவாக மாற எண்ணிறைந்த முடிவிலியான படிநிலைகளைக்கடக்க வேண்டும். இதை தான் அவர்கள் தாரதம்யம் என்று அழகாகச் சொல்கிறார்கள்.

அதாவது ஒரு ஜீவாத்மா பரமாத்மாவாக முழுவதும் மாறி விடுவதை , எப்படி கணிதம் விட்டம் சுற்றளவாக மாறி விடுவதை தடை செய்கிறதோ , அப்படி த்வைதத்தின் பஞ்சபேத தத்துவம் தடை செய்கிறது. விட்டம் சுற்றளவா மாறுது அப்படீன்னா பை (Pi) அப்படீங்கறது ஒரு Rational நம்பர் அப்படீன்னு ஆயிடும். கணிதத்தின் முக்கிய எண்ணான பையின் அழகே அது கணிக்க முடியாமல் irrational ஆக இருப்பது தான்.எனவே ஜீவன் மற்றும் பரமாத்வாவின் உறவும் இப்படி நிச்சயமற்று Irrational ஆகஇருக்கிறது என்கிறார் மத்வாச்சாரியார்.

ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு பற்றிய சமன்பாடுகளிலும் இந்த பை அப்படீங்கற நம்பர் வருது. அப்படீன்னா நம்மால் பிரபஞ்சத்தில் எதையும் இதுஇதன் இத்தனை மடங்கு அப்படீன்னு சொல்ல முடியாது. எதிலும் ஒரு நிச்சயமின்மைஇருக்கவே செய்யும். இதை தான் மத்வாச்சாரியார் பஞ்சபேதம் , அதாவது சமமின்மைஎன்கிறார். ஒரு ஜடப்பொருளும் ஜீவாத்மாவும் பேதப்பட்டது, ஏன் ஒரு ஜீவன் இன்னொன்றில் இருந்து பேதப்பட்டது. ஒரு ஜீவன் பரமாத்மாவிடம் இருந்துபேதப்பட்டது. என்கிறார்.

சங்கரர் மாதிரி சி இஸ் ஈக்குவல் டு ஃபோர் ஏ (C= 4A) அப்படீன்னு சொல்லிட்டா, பரமாத்வா ஜீவனின் இத்தனையாவது படி அப்படீன்னு சொல்லிட்டா நாம பரமாத்மாவை வரையறை செய்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ள அடைச்சுட்ட மாதிரிஇருக்கும். ஆனால் வேதாந்தம் பரமாத்மாவை நி-சீமா , எல்லையற்றவன், வரம்பு வரையறை அற்றவன் என்று சொல்கிறது.

எனவே மத்வாச்சாரியார் ரொம்ப சைன்டிபிக்-கா சி இஸ் ஈக்குவல் டு பைடி அப்படீங்கறார். ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா திரிகோணமிதில சைன் (sine) மற்றும் காஸ் (cos) மதிப்புகளை கண்டுபிடிக்கும் 'டைலர்' சீரீஸை அப்பவே கண்டுபிடித்தவர் மத்வாசாரியார். அவர் ஒரு பெரிய கணிதவியல் மேதை கூட .அவர் எவ்வளவு அழகா தன் சித்தாந்தத்தை கணிதத்தில் இருந்து, கணிதத்தின் ஒரு அழகான எண்ணில் இருந்து எடுத்திருக்கார் என்பது அற்புதம்.


சரி இங்க விசிஷ்டாத்வைதம் ,அதாவது ஆண்டாள் போன்ற ஆழ்வார்களின் நெறி என்னஅப்படீன்னா, பரமாத்மா என்பது வட்டம் போல மாயத்தோற்றம் காட்டும் ஒரு சதுரம்என்பது. இந்த மார்க்கம் த்வைதம் மற்றும் அத்வைதம் இரண்டையும் ஓரளவுஒத்துக்கொள்கிறது.

அரிஸ்டாடிலின் கோல்டன் மீன் (Golden Mean) அப்படீன்னுசொல்வாளே அது மாதிரி .ஒரேயடியாக ஒரு ஜீவனிடம் நீ தான் பரமாத்மா அப்படீன்னு சொல்ல முடியாது. அவனுக்கு மிதப்பு வந்து விடும். அதே போல உன்னால்எத்தனை சாதனை செய்தாலும் பரமாத்மாவாக எப்போதும் மாற முடியாது என்று சொன்னால் அவன் மனமுடைந்து விரக்தியாகி விடுவான். எனவே நீ அஞ்ஞானத்தில்இருக்கும் வரை பரம்பொருள் உனக்கு ஒரு குழப்ப வட்டம். நீ ஞானம் பெற்றால் அதுஉனக்கு ஒரு தெளிந்த சதுரம் என்று சொல்கிறது இந்த நெறி.

அதாவது வெளியே குப்பன்,சுப்பன், கந்தன், கண்ணன் என்று பலபேர்களில் அழைக்கப்படுபவர்கள் பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டருக்கு 'டிக்கெட்' ஆக மாறி விடுவது போல.

Source:Sri M K Anantha raman