திருவரங்கக் கலம்பகம் 73
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
இப்பாடலின் சிறப்புகள் :
1. இவ்வண்ணத்தில் உள்ள சொற்கள் அடுத்த வரியிலும் உடனே வருகின்றன (அந்தாதி போல)
2. இவ்வண்ணத்தில் உள்ள சொற்கள் தாமரையின் வெவ்வேறு பெயர்களையும் அரங்கனின் (அடைப்பு குறிக்குள்உள்ள ) அவயவங்களையும் குறிக்கின்றன
கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே ! (பொருது - மோதி)
ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே !
அரவம் சுமப்பதும் ஓர் அஞ்சன மலையே ! (அஞ்சனம் - கண் மை)
அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே !
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே !
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம்
உடன் முழுது அளந்தது, ஒருதாமரையே (இடது திருவடி)
வகிர் இளம் பிறையான் வார்சடை தேங்கப்
பகிரதி கான்றது ஓர் பங்கேருகமே (வலது திருவடி)
யாவையும் யாரையும் படைக்க, நான்முகக்
கோவை ஈன்றது ஓர் கோகனகமே (திரு நாபி)
திருமகட்கு இனிய திருமனை ஆகி
பரிமணி இமைப்பது ஓர் பதும மலரே (திரு மார்பு)
சடைத்தலை தாழ்த்து சங்கரன் இரப்ப
முடைத்தலை தவிர்த்தது ஓர் முளரி மாமலரே (வலத் திருக்கை )
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கள நாண்
வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே (இட த் திருக் கை )
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென்திசை (விபீஷணன்)
புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே (திரு முக மண்டலம்)
மண்திணி ஞாலமும் வானமும் உட்பட
அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போருகமே (திருப் பவள வாய்)
கடை சிவந்து அகன்று கருமணி விளங்கி
இடை சில அரி பரந்து இனி ஆய் நெடி ஆய்
இன்பம் தழீஇய இரு பெரும் கமலம் தழீ இய - நிறைந்த (திருக் கண்கள்)
துன்பம் தழீஇய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி
பவக்கடல் கடக்கும் பரிசு பண்ணினவே
Bookmarks