கர்பத்தை கலைக்காதே.ஒரு மரம் நல்ல பழம் அளிக்க .வேண்டுமானால் நல்ல விதை, நல்ல நிலம் நல்ல காலம் நல்ல உரம். பூச்சி கொல்லிகள் , தண்ணீர் வெய்யல் தேவை..

ஆறறிவு படைத்த மனிதனை பிறபிக்க எவ்வளவு நியமம் வேன்டும்
.
நற்புத்ரன் உண்டாகி , அவனும் அவன் பெற்றோரும் நன்மை பெற சில விதிகளை ஸாஸ்த்ரம் கூறுகிறது. முதல் ஸம்ஸ்காரம் நன்றாக இருந்தால் தான் மற்றவை நன்றாக இருக்கும் .தர்ம நூல் கூறும் தர்ம விதிகளை முதலில் கவனிப்போம்.

ஸ்த்ரீகள் ருதுவான தினம் முதல் 16 நாட்களுக்குள் தான் கர்ப்பம் தரிப்பார்கள். . 2,4,6,போன்ற இரட்டை படை எண்ணாணால் ஆண் குழந்தையும், 1,3,5, போன்ற ஒற்றை படை எண்ணாணால் பெண் குழந்தையும் உண்டாகும்.

இந்த பதிணாறு நாட்களிலும் முதல் நாலு தினங்கள்: அமாவாசை; பெள:ர்ணமி; ஷஷ்டி; அஷ்டமி. ஏகாதசி,:: த்வாதசி, சதுர்தசி:, மாத பிறப்பு:, ஜன்ம நக்*ஷத்திரமாகிய நாட்களில் ஸ்த்ரீ புருஷ ஸங்கமம் கூடாது,,

ரஜஸ் வலையான முதல் நாள் சன்டாளி; இரன்டாம் நாள் ப்ருஹ்மஹத்தி செய்தவள்;. மூண்றாம் நாள் வண்ணாத்தி எனப்படுவார்கள் அதாவது அந்த மாதிரி உள்ளவர்களின் தோஷ ஸாம்யம் என்பது கருத்து. . நான்காம் நாள் உண்டாகும் ஸிசு அல்பாயுஸ் ஆகும். 5 ல் புத்ரீ; 6ல் மத்யமமான புத்ரன்; ,

9ல் நல்ல புத்ரீ; 10ல் நல் புத்ரன்; 11ல் அதர்மம் செய்யும் பெண்; 12ல் சிறந்த புத்ரன்; 13ல் வ்யபீசாரியான பெண்; 14ல் தர்மஞ்யனும் ஆத்ம ஞ்யானியுமான புத்ரன்; 15ல் நல்ல இடத்தில் வாழ்க்கை படும் பெண்; 16ல் ஸகல நற்குண முள்ள புத்ரன். இப்படி முறையே ஜனிப்பார்கள்.

புருஷனின் வீர்யம் அதிகமானால் ஆணும், ஸ்த்ரீயின் ஷக்தி அதிகமானால் பெண்ணும் பிறக்கும். இரண்டும் சமமானால் நபும்ஸகம் பிறக்கும்.

மூன்று நாட்கள் நியமத்துடன் இருந்,தால் பிறக்கும் குழந்தைகள் க்*ஷேமத்துடன் இருக்கும்.இது ப்ரஜா ஸம்ரக்*ஷணத்திற்காக ஏற்பட்ட வ்ரதம்.

திங்கள், புதன் வியாழன், வெள்ளிக் கிழமைகளில்,ரோஹிணி உத்திரம். உத்திராடம், உத்ரட்டாதி ,ஹஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், ரேவதி, ஆகிய நக்*ஷத்திரங்களில்
, ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுஸு, கும்பம், மீனம், ஆகிய லக்னங்களில்,கூடுவது நல்ல சிசு உதிக்க ஏற்றது.

தம்பதிகள் இருவரும் மனம் ஒருமித்து தார்மீக நன் மகப்பேறு பெற இறைவனை வேண்டி சேர்வது நல்லது.

சுவாசம் வலது மூக்கு வழியாக செல்ல வெண்டும்.. ருது காலத்தில் அவச்யம் ஒரு முறை கர்பாதானம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சிசுவை கொண்ற பாபம் உண்டாகும். பித்ருக்களின் கடன் தீர்ப்பதற்கு ஒரு புதல்வன் அவஸ்யம் வேண்டும். அது வரை ருது சங்கமம் அவஸ்யம். பிறகு நிர்பந்தமில்லை.

பூரண கர்ப்பிணி, இஷ்டம் இல்லாதவள்,வியாதி உள்ளவள் .விறிந்த கேசமுள்ளவள்., பசி உள்ளவள். அதிகமாக புசித்தவள்,ஆகிய ஸ்த்ரீகளிடம் சேர கூடாது,

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஸ்த்ரீகள், ப்ரஸவம் வரை புருஷ ஸங்கமம் வேண்டும் என இந்திரனிடம் வரம் கேட்டிருப்பதால், அவர்கள் கோரினால் ருது காலம் இல்லாத போதும் அதாவது 16 நாட்கள் சென்ற பின்பும் சங்கமம் செய்வது பாபமல்ல. பகலிலும், இரு ஸந்த்யா காலங்களிலும் இரவு பதினோரு மணிக்கு மேலும் ஸ்த்ரீ சங்கமம் கூடாது. அஸுர குணமுள்ள குழந்தை பிறக்கும்.

சங்கம காலத்தில் இருவரும் கண்களை மூடக்கூடாது. கோபம், துக்கம் இல்லா.மல் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும்.

இந்த விதிகளை அனுசரித்தவர் கிருஹஸ்தராயினும் ப்ருஹ்மசரியத்தை கைகொண்டவராவர். இதில் தவறு செய்தால் அது நமக்கும் பிறக்கும் சிசுவிற்கும் தீமை செய்தது ஆகும். இதில் சாஸ்த்ரம் புகுந்து போகத்திற்கும் குறைவின்றி , அதை கட்டுப்படுத்தி முடிவில் மோக்*ஷத்திற்கும் வழி காட்டுகிறது.

அரணியை கடைந்து அக்னி எடுப்பது போலாம் இது என்கிறது வேதம்.
16 நாட்களுக்கு பிறகு சங்கமம் ருது வாகும் வறை செய்து கொள்ளலாம். குழந்தை உண்டாகாது. கர்ப்பம் அழிக்க வேண்டிய வேலையே இருக்காது.

பஞ்சாங்கம் பார்த்து பத்து மாதம் கழித்து பிறக்கும் குழந்தைக்கு கிரகம் அஸ்தங்கதம் (மெளட்யம்), நீசம் இல்லாமலுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இம்மாதிரி பார்த்து உடலுறவு கொள்ள வேண்டும். தாய் மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவைகளை கற்று கொடுக்க வேண்டும். ,


.