வேதம் தசோபநிஷத்துக்கள் _ Part 3

சரீரம் (சரீரம் என்கிறபோது மனஸையும் சேர்த்துத்தான் சொல்வதாக அர்த்தம்) தனதல்ல என்றாக்கி விட்டால், அப்புறம் சாவே இல்லை. தனதில்லாத சரீரத்துக்கு வருகிற சாவு தன்னை எப்படி பாதிக்கும்? ம்ருத்யுவான சாவு இல்லாததால், இவன் அமிருதமாகி விடுகிறான். இஹைவ இவன் இப்படி அமிருதமாவதைத்தான் கர்மகாண்டத்திலே வருகிற புருஷஸக்தாதி மந்திரங்களும் சொல்கின்றன. உபநிஷத்துக்களில் இந்த கருத்து விசேஷமாகத் திரும்பத் திரும்பக் கூறப்படும்.

நமக்கு துக்கஹேதுவாக இருப்பது சரீரமும் அதன் மூலம் செயல்படுகின்ற மனஸும்தான். துக்கம் போய் ஸதா ஆனந்தமாக இருப்பதைத்தான் எல்லா மதத்திலும் மோக்ஷம் என்று சொல்லியிருக்கிறது. அதற்காக வேறு ஏதோ பரலோகம், மோட்ச லோகம் என்ற ஒன்றுக்குப் போகவேண்டும் என்றுதான் அத்வைதத்தைத் தவிர மற்ற ஸம்பிரதாயங்களெல்லாம் சொல்கின்றன. இந்த லோகங்களில் கிடைப்பதைவிட நிறைவான ஆனந்தம், நிஜமான மோக்ஷம், இந்த லோகத்தில் இருக்கும்போதே, சரீர அபிமானத்தை அடியோடு தள்ளி விட்டு ஆத்மாவில் வேரூன்றி நிற்பதால் கிடைக்கிறது என்று சங்கர பகவத் பாதாள் ஸ்தாபித்திருக்கிறார்.


ததேதத் அசரீரத்வம் மோட்சாக்யம்

என்று ஸத்ர பாஷ்யத்தில் (l.1.4) சொல்கிறார். அசரீரி என்றால் நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கறோமென்றால், ஆள் தெரியாமல் ஒரு குரல் மட்டும் கேட்பது என்று. அசரீரி என்றால் சரீரம் இல்லாமலிருப்பது என்பதே அர்த்தம். சரீரம் நான் என்கிற பிரக்ஞை போகிறதுதான் அசரீரத்வம். அதுதான் மோட்சம் என்று ஆசார்யாள் லட்சணம் கொடுக்கிறார். சரீரம் இல்லாமல் அசரீரியாகப் பண்ணிக்கொள்வது என்றால், தற்கொலை செய்துகொள்வது என்று அர்த்தமில்லை.

தற்கொலையும் ஸாதாரணச் சாவும் ஸ்தூல தேஹத்திற்குத்தான். இது போனபின்னும் மனோமயமான ஸட்சும தேஹம் இருந்து கொண்டு கஷ்டப் படுத்தும் ஆசைகளை குறைத்துக் கொண்டே வந்து, அடியோடு தேய்த்து விட்டால் தான் சரீராபிமானம் முற்றிலும் போய், அபிமானிக்கிற மனஸும் போய்விடும். உள்ளேயிருக்கிற ஆத்மா மட்டுமே பிரகாசிக்கும். இதற்காக, வேறு எந்த லோகத்துக்கும் போகத் தேவையில்லை. இதைத்தான் வேத வேதாந்தங்கள் இஹைவ, இஹைவ என்பது.

இந்த அம்ருத நிலையை அடைவதற்கு முக்யமான இரண்டு சத்ருக்கள் காம, க்ரோதம் என்று கீதையான ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறது. அதற்கு ஆதாரம் ச்ருதியான சாந்தோக்யத்தில் உள்ள (Vlll.12.1) 'ப்ரிய அப்ரியம்'என்ற வாக்கியம், விருப்பு வெறுப்பு என்று அர்த்தம். விருப்பு தான் காமம்;வெறுப்பு க்ரோதம். சரீரம் இல்லாதவனை விருப்பு வெறுப்புகள் தொடமாட்டா என்று சாந்தோக்யம் சொல்கிறது. அதாவது, "c விருப்பு வெறுப்பிலிருந்து விடுபட வேண்டுமானால் உயிரோடு இருக்கிறபோதே சரீரம் நானில்லை என்று ஆக்கிக்கொள்" என்கிறது.

ஒரே ஜீவாத்மாவின் அஹங்கார - மமகாராதிகளை ஒட்டி (நான் எனது என்ற பாவனைகளை ஒட்டி) கௌணாத்மா, மித்யாத்மா, முக்யாத்மா என்று மூன்றாகரப் பிரித்துச் சொல்வது வழக்கம். பெரியோர்கள் இந்த விஷயத்தை ச்லோகமாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்த ச்லோகமானது பகவத்பாதாளால் ப்ரம்ம ஸத்ர பாஷ்யத்தில் உதாஹரிக்கப்பட்டிருக்கிறது.

கௌண-மித்யாத்மனோ (அ) ஸத்வே புத்ர தேஹாதி பாதனாத்|
ஸத் -ப்ரஹ்மாத்மாஹம் இத்யேவம் போதே கார்யம் கதம் பவேத்||
( ஸத்ர பாஷ்யம் l.1.4)

புத்ர மித்திரர்கள் நாமே என்றும், அவர்களுடைய ஸுகதுக்கம் நம்முடையது என்றும் எண்ணும் அபிமானமானது எல்லாரிடத்திலும் குடிகொண்டிருக்கிறது. அதுதான் கௌணாத்மா. கௌணமென்றால், உபசாரமாகச் சொல்லுவதென்று அர்த்தம். நாம் வேறு, புத்ர மித்ரர்கள் வேறு என்று நமக்குத் தெரிந்திருக்கும் பொழுதே, நாம் நாம் என்கிற அபிமானம் நமக்கு அவர்களையட்டி வருவதால் கௌணாத்மா என்று சொல்லப்பட்டது. அவர்களைவிட நெருங்கின சரீரம் முதலியவற்றில் நான் என்கிற அபிமானம் உண்டாவது மித்யாத்மா.

சுத்தமான ஆத்ம ஸ்வருபத்தைப் பிரித்து,ப்ரம்ம ஸ்வரூபமே நான் என்பது அநுபவத்திற்க்கு வருகிறபொழுது,ப்ரம்மமே ஆத்மாவாகி விடுகிறது.அதைத் தான் முக்கியாத்மாவென்று சொல்வது.முதலில் சொல்லப் பட்ட கௌணாத்மா,மித்யாத்மா இவ்விரண்டையும் விலக்கி விட்டால் புத்ர மித்திரர்கள், சரீர இந்திரியங்கள் இவைகளுடைய ஸம்பந்தம் நீங்கிவிடும். அப்பொழுது 'ஸத்யமான ப்ரம்ம ஸ்வரூபமாகவே நான் இருக்கிறேன்'என்கிற ஞானம் உண்டாகிறது. அதற்குப் பிறகு செய்யவேண்டியது ஒன்றுமே கிடையாது என்பது மேலே சொல்லிய ச்லோகத்தின் தாத்பரியம்.

"Arise, awake: எழுந்திருங்கள்,விழித்துக் கொள்ளுங்கள்"என்று, விவேகாநந்தர் எல்லாரையும் தட்டி எழுப்பி, ராமகிருஷ்ணா மிஷனுக்கு motto -வாக (லஷ்ய வாசகமாக) வைத்தது, கடோபநிஷத்தில் வருகிற மந்திரம்தான்.

இப்போது நிறைய மேற்கோள் காட்டப்படும் அநேக வாசகங்கள் இந்த உபநிஷத்தில் வருகிறவையே. உதாரணமாக, "படிப்பாலோ மேதாவித்தனத்தனத்தாலோ ஆத்மாவை அடைய முடியாது" ("நாயமாத்மா") என்கிற மந்திரம்; ஜீவன் என்ற தேர்க்காரனுக்கு சரீரம் தேர்,புத்தி ஸாரதி,மனஸ் கடிவாளம், இந்திரியங்கள் குதிரைகள் என்ற விஷயம்; ஹ்ருதய குகையில் பரமபுருஷன் அங்குஷ்ட (கட்டை விரல்) பிரமாணமாக ஜோதி ரூபத்திலிருக்கிறான் என்ற ஸமாசாரம்;தீபாராதனை செய்கிறபோது சொல்லும் ந தத்ர ஸர்யோ பாதி மந்திரம் (பரமாத்மாவின் ஸந்நிதானத்தில் சூரியன். சந்திரன், நட்சத்திரம் அக்னி எல்லாமே ஒளி மழுங்கி விடுகின்றன.

Contd4
source: subadra

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends