ஒரு நாள், தரிசனத்துக்கு வந்தவர்களிடமெல்லாம் Сதாயாரை விற்கலாமா? வயதாகிவிட்டால், தாயாரை விற்கலாமா?С என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள் பெரியவாள்.

தொண்டர்களுக்கு புரியவேயில்லை.


தாயாரை-வயதான தாயாரை-ஏன் விற்கணும்? விற்றாலும் யார் வாங்குவார்கள்? தாயாரை விற்றதாக கேள்விப்பட்டதில்லையே?Тதாயாரை விற்க கூடாதுС என்று எல்லோரும் ஒருமுகமாக கூறினார்கள்.Тஅப்படி ஓர் அநியாயம் நம்ம தேசத்திலே நடந்துண்டு இருக்கு.எந்த மாநிலத்தில்? ஹிமாச்சல் பிரதேசத்திலா? அருணாச்சல் பிரதேசத்திலா? நம்ம தமிழ் நாட்டில் தான்Еதினமும் நூற்றுக்கணக்கில் விற்பனை ஆகிறது. வாங்குகிறவன் எங்கோ கொண்டு போய் விடுகிறான்ЕТ

பெரியவாள் இவ்வளவு வருத்தப்பட்டு பேசியதை, ஆண்டாண்டு காலமாக உடனிருந்து பணி செய்யும் சீடர்கள் கேட்டதில்லை.

Сகோமாதா, கோமாதான்னு பூஜை செய்யறோம். குளிப்பாட்டறோம். குங்குமம் வெக்கறோம். பால் கறந்து காப்பி சாப்பிடறோம் (ஈஸ்வரன் கோவிலுக்கு கொடுக்கறதில்லே), ஆனா, வயசாகி போய் பால் மரத்து போச்சுன்னா, வீட்டில் வெச்சுக்கறதில்லே. கசாப்பு கடைக்காரன் கிட்டே வித்துடறோம்Еஅநியாயம்Еசகல தேவதா ஸ்வரூபமான பசுவை இப்படி கொன்றால், பகவான் எப்படி நம்மை ரட்சிப்பார்? வசதிப்பட்டவர்கள் கோசாலை வைத்து வயதான பசுக்களை சம்ரக்ஷிக்கணும்.Т


பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்கள் Ц பஞ்சகவ்யம் ஈஸ்வர பூஜைக்கு தேவையானவை.

பசுக்களிடம் எல்லை இல்லாத பாசம் பெரியவாளுக்குЕ அவற்றை கண்டால், கோகுலத்து கண்ணனாகவே மாறி விடுவார்கள்.
நன்றி: ஸ்ரீமடம் ஸ்ரீ பாலு மாமா அவர்கள், கச்சிமூதூர் கருணாமூர்த்தி புத்தகத்தில்

source:mahesh

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends