திருவரங்கத்தந்தாதி 1 / 100 தொண்டு செய்ய வரம் விரும்பினேன் !
திருவரங்காவுறைமார்பா ! திசைமுகன் சேவிப்பக் கந்
திருவரங்காதரித்தின்னிசை பாட திருக்கண்வளர்
திருவரங்கா ! உன் பழவடியேற்கருள்செய்யெழுந்
திருவரங்காதலித்தேனுனக்கே தொண்டு செய்வதற்கே !
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
திரு அரங்காய் உறை மார்பா ! திருமகள் தன இடமாய்க் கொண்ட மார்பை உடையவனே !
திசைமுகன் சேவிப்ப பிரமன் வணங்கவும்
கந்திருவர் அங்கு ஆதரித்து இன்னிசை பாட கந்தர்வர்கள் பக்தியுடன் இனிய பாடல் பாடவும்
திருக்கண்வளர் திரு அரங்கா நித்திரை செய்யும் திரு அரங்கா
உன் பழ அடியேற்கு அருள் செய்ய எழுந்திரு உன் பழமையான அடியவனான எனக்கு அருள் செய்ய எழுந்திரு !
வரம் காதலித்தேன் உனக்கு தொண்டு செய்வதற்கே உனக்கு தொண்டு செய்ய வரம் விரும்பினேன்
Bookmarks