திரு அரங்கத்தந்தாதி 2 திருவடியை அடைந்தோம் !

செய்யவளைக்குருவின்னருளாற்றிருத்தாள் வணங்கி
செய்யவளைக்குலஞ்சூழரங்கேசன் சிறிதமுது
செய்யவளைக்கும் புவிக்குமங்காந்த செவ்வாய் முகுந்தன்
செய்யவளைக்குஞ்சிலம்பணி பாதங்கள் சேர்ந்தனமே

குரு இன் அருளால் ஆசாரியருடைய இனிய கருணையால்
செய்யவளை திருமகளை
திருத்தாள் வணங்கி திருவடி தொழுது
செய்யவளைக்குலம் சூழ் சங்கினங்கள் சூழ்ந்த
ரங்கேசன் திரு அரங்க நாதன்
அ ளைக்கும் புவிக்கும் வெண்ணையையும் பூமியையும்
அமுது செய்ய உண்ணுவதற்கு
சிறிது அங்காந்த சிறிது திறந்த
செவ்வாய் முகுந்தன் வாயை உடைய முகுந்தன்
செய்யவளைக்கும் சிலம்பணி சிறந்த வளைந்த சிலம்பு அணிந்த
பாதங்கள் சேர்ந்தனமே ! திருவடியை அடைந்தோம் !