திருவரங்கத்தந்தாதி 3 மோக்ஷத்தை கொடுத்து அருள்வாய் !
தனமாதரஞ்சொற்குதலைப்புதல்வர் தரணியில்லந்
தனமாதரஞ்செயும் வாழ்வஞ்சியேதஞ்சநீயென்ப்போந்
தனமாதரங்கிக்க வெற்பெடுத்தாய் தண்ணனந்தசிங்கா
தனமாதரங்கமுள்ளாயரங்கா முத்திதந்தருளே
ஆ தரங்கிக்க பசுக்கள் நிலை கலங்க
வெற்பெடுத்தாய் கோவர்த்தன கிரியை குடையாய் எடுத்தவனே !
தண் அனந்த சிங்காதன ஆதி சேஷனை சிங்காதனமாக உடையவனே !
மா தரங்கம் உள்ளாய் பெரிய கடலில் பள்ளி கொண்டவனே !
அரங்கா ஸ்ரீரங்கநாதா !
தனம் மாதர் கொங்கை எழில் உடைய மகளிரும்
அம் சொல் குதலைப்புதல்வர் அழகிய மழலை பேசும் பிள்ளைகளும்
தரணி விளை நிலமும்
இல்லம் வீடும்
தனம் செல்வமும் ஆகிய இவைகளில்
ஆதரம் செய்யும் ஆசை கொள்ளும்
வாழ்வு அஞ்சி வாழ்க்கைக்கு பயந்து
நீயே தஞ்சம் என நீயே ரக்ஷகன் என்று
போந்தனம் சரண் அடைந்தோம்
முத்தி தந்தருளே மோக்ஷத்தை கொடுத்து அருள்வாய் !
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks