அருள்வாக்கு: புத்தியும் சக்தியும் தா!

ஆசையையும் கோபத்தையும் நம்மால் அடக்க முடியவில்லை. இவை இரண்டுமே நம்மை எப்பொழுதும் துன்புறுத்தி வருகின்றன. எந்த பொருளை எவ்வளவு அடைந்த போதிலும், போதும் எனும் மன நிம்மதி நமக்கு ஏற்படுவதில்லை. உலகத் துயரம் நம்மை விட்டபாடில்லை. சிறு துயரத்தைகண்டு விட்டாலும் மனம் கலங்கத்தான் செய்கிறது. இதனின்றும் கரை ஏற வழியென்ன?

நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாக தன்னிஷ்டபடி யெல்லாம் தீவிரமாக வேபை செய்து கொண்டிருந்த இந்த மனத்தை தன்னுள் அடக்க சிறிது சிறதாகவேனும் முயற்சி செய்ய ஆரம்பிக்க வேணடும். மனம் அடங்காவிட்டால் நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அது தான் நாம் பெற வேண்டிய பூர்ண சுதந்திரமாகும்.

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல் கடவுளது தியானத்தில் அமர வேண்டும். வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால் நாளடைவில் புத்தியானது தெளிவடையும்.

ஆசையையும், கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனமாகும். இவ்வித சாதனைகளை படிப்படியாக மேற்கொண்டவனுக்கு சீக்கிரமாக ஆத்ம ஞானம் உண்டாகும். குறைவில்லாத அந்த ஞானத்தை பெறுவன் தான் உண்மையான சுதந்திரனாகிறான்.

பிற ஸ்திரீகளைதாயார்களாக மதிக்க வேண்டும். பிற உயிரை தன்னுயிர் போல் மதிக்க வேண்டும். உயர் போவதாயிருந்தாலும் உண்மையே பேச வேண்டும்.

சமூக சச்சரவுகள், வகுப்பு சச்சரவுகள் செய்வதை அறவே ஒழிக்க வேண்டும். எல்லோரிடமும் சம அன்பும் கொண்டு ஒழுக வேண்டும். மக்களெல்லாம் சுகமாக வாழ வேண்டுமென ஒவ்வொருவனும் தனது அறிவு வளர்ச்சிக்கும், ஆத்ம முன்னேற்றத்துக்கும் பாடுபடவேண்டும். இவற்றுக்கெல்லாம் புத்தியும், சக்தியும் தருமாறு கடவுளை பிரார்த்திக்க வேண்டும்.


-ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

Source: radha


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends