திருவரங்கத்தந்தாதி 5 அரங்கன் அடியார் எதை விரும்பமாட்டார் ?Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
தாரணிதானவன்பாலிரந்தான் சங்கம் வாய் வைத்தொன்னார்
தாரணிதானவஞ்செய்தானரங்கன்றமர்கள் பொருந்
தாரணிதானவமராவதியுந்தருநிழலுந்
தாரணிதானவயிராவதமுந்தருகினுமே


பொருள் :


தானவன்பால் மஹாபலியிடம்

தாரணி இரந்தான் மூன்று அடி நிலத்தை யாசித்தவனும்
சங்கம் வாய் வைத்து சங்கத்தை வில் வைத்து ஊதிய உடனே
ஒன்னார் தார் அணி பகைவரது படைவகுப்பை
அவம் செய்தான் பழுது படுத்தியவனும் ஆன
அரங்கன் தமர்கள் ரங்க நாதனுடைய அடியார்கள்
அணிது ஆன அமராவதியும் அழகிய சுவர்க்க லோகத்தையும்
தரு நிழலும் கற்பக விருக்ஷத்தின் நிழலையும்
தார் அணி மாலை அணிந்த
தானம் அயிராவதமும் மதம் கொண்ட ஐராவதத்தையும்

தருகினும் கொடுத்தாலும்
பொருந்தார் பெற விரும்ப மாட்டார்