இம்மாதிரி நினைத்துக் கஷ்டப்படுகிற போதுதான் (மேலே சொன்ன) உபநிஷத் மந்திரம் ஆறுதலாக வருகிறது. நமக்கு disciplined life (நெறியான வாழ்க்கை) இல்லாததால், எப்போதும் பார்த்தாலும் வியாதி, வக்கை, ஜ்வரம் முதலியன வருகன்றனவல்லவா?நம்மைப் பார்த்துத்தான் உபநிஷத், இந்த நோய், நொடி, காயலா எல்லாமே பெரிய தபஸ்தான். இப்படிப் பார்ப்பதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டாயானால், தபஸினால் கிடைக்கிற பாபத்தின் அழிவு உனக்கும் உண்டாகி, மோக்ஷ லோகத்துக்குப் போய் உண்டாகி, மோட்ச லோகத்துக்குப் போய் விடுவாய்"என்று சொல்கிறது. இவ்வளவு plain -ஆக தெளிவாக, நேராகச் சொல்லாவிட்டாலும், அந்த மந்திரத்தின் அர்த்தம் இதுதான்.
ஜ்வர தாபம், தாப ஜ்வரம் என்றெல்லாம் சொல்கிறோமல்லவா?'தாபம்'என்றால் கொதிப்பது, வேகிறது என்று அர்த்தம். 'தபஸ்', 'தாபம்'என்று இரண்டுக்கும் root ஆன'தப'என்னும் வார்த்தைக்குக் கொளுத்துவது என்று அர்த்தம். ஸர்யனுக்குத் தபனன் என்றே பேர். ஆகையால் சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தபஸை நாம் பண்ணாவிட்டாலும், தானாக வந்த இந்த ஜ்வர தாபத்தையே நம் பாபத்தைப் போக்குவதற்காக ஈச்வரனே தந்திருக்கிற தபஸ்தான் என்று வைத்துக் கொண்டுவிட வேண்டும்.
டைபாய்ட், நிமோனியா மாதிரி வந்து 105, 106 (டிகிரி) என்று உடம்பை வறுத்து எடுக்கிறதா?அப்பாடா நாம் பஞாசாக்னி தபஸ் பண்ணாததற்கு பதிலாகத்தான் ஸ்வாமி இந்த தாப ஜ்வரத்தைத் தந்திருக்கிறார் என்று நினைத்து நிம்மதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
மலேரியா வந்து, எத்தைனைக் கம்பிளி போர்த்தினாலும் போதாமல் குளிர் நடுக்கி எடுக்கிறதா?ரொம்ப நல்லது!நாம் குளிர்காலத்தில் ஐஸுக்குள் இருந்து கொண்டு தபஸ் பண்ணமாட்டோமோல்லியோ?அதனால்தான் பரம கருணையோடு பகவானே நமக்கு இந்தக் குளிர் ஜுரத்தை அனுப்பியிருக்கிறார் என்று வைத்துக் கொண்டு விடவேண்டும்.
இப்படி இந்த உடம்பு (நோய் வந்தாலும்) , அடிபட்டாலும், காயம் பட்டாலும், ஒவ்வொன்றையும் ஒரு தபஸாக - நாமாகப் பண்ணாத போதிலும் பகவானே அனு ப்பி வைத்திருக்கிற தபஸாக எடுத்துக் கொண்டு விடவேண்டும். பழகப் பழக இதனால் நோய் நொடியைத் தாங்கிக் கொள்கிற சக்தி உண்டாகும். டாக்டர், மருந்து என்று ஒரு அதன் வழி விட்டு விடுவோம். பாப கர்மாவைத் தீர்த்து வைக்கிற ஒரு நல்ல உபாயமாக நம்மைத் தேடி வந்திருக்கிற தேக சிரமத்தை நாமாகப் போக்கிக் கொள்ள மாட்டோமில்லையா?
இதனால் doctor fees, ;மருந்துச் செலவு எல்லாமும் லாபம். எல்லாவற்றையும் விடப் பெரிய லாபம், சிரமத்தை சிரமமாக நினைக்காமல் ஏற்றுக்கொள்கிற 'திதிக்ஷ' என்ற உயர்ந்த பண்பைப் பெற்று விடுவோம்.
இவ்வளவையும்தான் உபநிஷத் மந்திரம் ஸம்க்ஷேபமாக (சுருக்கமாக) ச் சொல்லிவிடுகிறது. மஹத்தான் பாபங்களைப் பண்ணிவிட்டு அதற்குப் பிரயாச்சித்தமான விரதம், தபஸ் எதையும் பண்ணாமலே, பண்ண முடியாமலே, திராணியில்லாமல் இருக்கிறோமே என்று துக்கப் படும்போது, இந்த மந்திரம் நமக்கும் ஸ்வாமியே அனுப்பிவைக்கிற தபஸ் இருக்கிறது என்று ஆறுதல் சொல்கிறது.
தசோபநிஷத்துக்களும் முடிகிற இடமான பிருஹதாரண்யகத்தின் கடைசி அத்தியாயத்தில், கர்ம காண்டத்துக்கு வேதாந்தம் விரோதமே இல்லை என்று அழுத்தமாகக் காட்டுகிற மாதிரி பஞ்சாக்நி வித்யையையும், ஸுப்ரஜைகளை (நன்மக்களை) விரும்பும் கிருஹஸ்தர்கள் அநுஷ்டிக்க வேண்டிய கர்மாக்களையும் சொல்லியிருக்கிறது.
Bookmarks