. ஆ ப்ருஹ்ம லோகாத் ஆசேஷாத் ஆலோகா லோக பர்வதாத் யே வஸந்தி த்விஜா தேவா; தேப்யோ நித்யம் நமோ நம: . இந்த ஸ்லோகத்தை கூறி நமஸ்கரிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தை கூறி பூமியை சுத்தம் செய்யவும். அபஸர்பந்து யே பூதா யே பூதா புவி சம்ஸ்திதா: யே பூதா விக்ன கர்த்தார: தே கச்சந்து சிவாக்ஞயா.
ஆஸனத்தில் அமர இதை கூற வேண்டும். ப்ருத்வி த்வயா த்ருதா லோகா: தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் குரு ச ஆஸனம்.
ஆசமனம்..
. ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,
,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு
எவர் நம்முடைய புத்தியை தூண்டுகிறாறோ அப்படி பட்ட ப்ரகாஸனான உலகை உண்டு பண்ணுபவருடைய மிக உயர்ந்ததான தேஜஸை த்யானம் செய்கிறோம்.
ஐந்து இடங்களில் நிறுத்தி மூச்சு விட்டு ஜபிக்க வேண்டும்.
1008 ஜபித்து முடித்த பிறகு ப்ராணாயாமம் செய்து, காயத்ரீ உபஸ்தானம் கரிஷ்யே என்று சொல்லி உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மனேப்யோ ஹ்யனுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம்.:என்று உபஸ்தானம் செய்யவும்.
நமஸ்காரம் செய்யவும். பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்யவும்.
பிறகு மாத்யானிகம், ப்ருஹ்ம யக்யம், மாத்யானீக காயத்ரீ ஜபம் செய்யவும்..
ஜப மாலை அல்லது விரலால் எண்ணிக்கொண்டு ஜபம் செய்ய வேண்டும். எண்ணாமல் செய்ய கூடா
து.
மோதிர விரல் நடு ரேகையில் கட்டை விரலால் 1 என்று எண்ண ஆரம்பித்து கீழ் ரேகை 2; சுண்டி விரல் கீழிருந்து மேலாக 3,4,5 (கீழ்,நடு ,மேல் ரேகை) மோதிர விரல் மேல் ரேகை 6, நடு விரல் மேல் ரேகை 7,
ஆள் காடி விரல்
மேல்,நடு,கீழ் 8,9,10. ஆள் காட்டி விரல் கீழ் ரேகையையே 11., நடு, மேல் 12.13 நடு விரல் மேல் ரேகை 14, மோதிர விரல்மேல் ரேகை 15, சுண்டி விரல் மேல் நடு கீழ் 16,17,18, மோதிர விரல் கீழ் மேல் 19.20 என எண்ணிக்கொண்டும் வரலாம்.
Bookmarks