திருவரங்கத்தந்தாதி 6 யாரைப் பாடவேண்டும் ?
தருக்காவலாவென்று புல்லரைப்பாடித்தனவிலைமா
தருக்காவலாய் மயிலே குயிலேயென்றுதாமதராய்த்
தருக்காவலாநெறிக்கேதிரிவீர் கவிசர்ற்றுமின்பத்
தருக்காவலாயுதன்பின்றோன்றரங்கர்பொற்றாளிணைக்கே
தரு காவலா என்று கற்பக விருக்ஷத் தலைவனே இந்திரா என்று
புல்லரைப்பாடி அற்ப மனிதர்களைப பாடியும்,தனவிலைமாதருக்காவலாய் கொங்கை எழில் வேசியர்களை ஆவலுடன்
மயிலே குயிலேயென்று மயிலே குயிலேயென்று கொண்டாடியும்,
தாமதர் ஆய் தாமஸ குணம் கொண்டும்,
தருக்கா மகிழ்ச்சி அடைந்து,
அலா நெறிக்கே திரிவீர் கெட்ட வழியில் திரியும் புலவர்களே !
பத்தருக்கா அடியார்க்கு அருள் செய்யும்
அலாயுதன் பின் தோன்றல பலராமன் தம்பியான
அரங்கர் பொன் தாள் இணைக்கே அரங்கன் திருவடிகளை
கவிசர்ற்றுமின் கவி பாடுங்கள் !
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks