திருவரங்கதந்தாதி 7 நரகத்தைத் தவிர்க்க என்ன வழி ?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதாளத்தனத்தத்தைச்சொல்லியரால்வருந்தாழ்மலபா
தாளத்தனத்தத்தைத்தப்பநிற்பீர்புடைதங்கியவே
தாளத்தனத்த்தைத்தீர்த்தானரங்கன்சகடுதைத்த
தாளத்தனத்தத்தையாயுதன்பாதந்தலைக்கொண்மினே

பதவுரை :

தாளம் தனம் கைத்தாளம் போன்ற உருவமுள்ள கொங்கைகளையும்
தத்தை சொல்லியரால் கிளி போன்றஇனியபேச்சையுமுடையவர்களால்
வரும் உண்டாகும்
தாழ் மல தாழ்ந்த, அழுக்குள்ள
பாதாளத்து நரகத்து
அனத்தத்தை துன்பத்தை
தப்ப நிற்பீர் தவிர்க்க விரும்புபவர்களே !
புடை தங்கிய சூழ்ந்து நின்ற
வேதாளத்தன் பூத் கணங்களை உடைய சிவனது
அத்தத்தை பிச்சை எடுத்தலாகிய துன்பத்தை
தீர்த்தான் போக்கியவனும்,
சகடு உதைத்த சகடாசுரனை உதைத்த
தாள் அத்தன் திருவடிகளை உடையவனும்
அத்தத்து கைகளில்
ஐ ஆயுதன் ஐந்து ஆயுதங்களை உடையவனுமான
அரங்கன் ரங்க நாதனுடைய
பாதம் திருவடிகளை
தலைக்கொண்மின் தலை மேல் வைத்து வணங்குங்கள் !