Announcement

Collapse
No announcement yet.

கண்ணதாசன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கண்ணதாசன்

    கண்ணதாசன்

    தன்னிடம் ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பரொருவர் வைத்திருந்த வெளிநாட்டுக்கார் மீது கண்ணதாசனுக்கு ஆவல். நண்பரும் அதை விற்கப்போகிறார் என்பதைக்கேள்விப்பட்ட கவிஞர், அதைத்தனக்கே தரவேண்டுமென்று விலையும் பேசிவிட்டார். முழுப்பணமும் கொடுக்க கண்ணதாசனிடம் பணமில்லை. எனவே மூன்றில் ஒரு பங்கு பணம் அப்போதே தருவதாகவும், பாக்கியை விரைவில் தந்துவிடுவதாகவும் சொல்ல ந்ண்பரும் சம்மதித்தார். அதுமுதல் கவிஞர் அந்தக்காரை தன்னுடைய கார் போலவே கனவு காணத்துவங்கினார்.


    மறுநாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக்காரை எடுத்து வருவதாக ஏற்பாடு. ஆனால் முதல்நாள் அந்த நண்பரின் மற்ற நண்பர்கள் சிலர், ‘கண்ணதாசன் கொடுக்கல் வாங்கலில் ரொம்ப மோசமென்றும், அவருக்கு ஊரைச்சுற்றி நிறைய கடன் இருப்பதாகவும், எனவே நண்பரின் பாக்கிப்பணம் வசூலாவது கடினம்’ என்றும் சொல்ல நண்பர் உஷாரானார்.

    (‘இந்தியாவின் ஜனாதிபதியைப்போல சம்பாதித்தும்கூட, இந்தியாவைப்போல கடன் வாங்கியவர் கண்ணதாசன் ‘ என்று கவிஞரைப் பற்றி ஒரு சொல்வழக்கு உண்டு).


    மறுநாள் காலை கவிஞர் குளித்து, உணவருந்திவிட்டு, வண்டியை எடுத்துவர தன் ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குச் செல்ல, நண்பரோ குண்டைத்தூக்கிப்போட்டார். ‘அந்த கார் தனக்கு ராசியானது என்றும், அதைவிற்க தன் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் விருப்பமில்லை’ என்றும் கூற, கவிஞர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். தான் ஆசைப்பட்டு தனதாகவே நினைத்திருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவர் மனதில் தங்கியிருந்தது.


    அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு, இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்த ‘பணக்கார குடும்பம்’ படத்துக்கு ஒரு சோகப்பாடல் எழுத அமர்ந்த கவிஞருக்கு அன்று காலை நடந்த சம்பவம் மனதைக்குடைய, பல்லவியை இப்படித் துவங்கினார்….


    “பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக – நான்
    பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக”.

    (சூழ்நிலைகளை தன் பாடலுக்குள் புகுத்திக்கொள்வதில் கவிஞருக்கு நிகர் அவர்தான்).
    இதோ அந்தப் பாடல் சூழ்நிலையை ரசியுங்கள்:-




    source: harikrishnamurthy
    Last edited by bmbcAdmin; 28-05-13, 19:21.

  • #2
    Re: கண்ணதாசன்

    I Like this very much (hence added the video).


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X