நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை - 28.

நூற்றுக்கணக்கான சுவாஸினிகளுக்கு (சுமங்கலிகளுக்கு) உயர்ந்த முறையில் விருந்தளிக்க வேண்டும் என்று விருப்பம். பெரியவாளிடம் அனுமதி பெற்று, பல பேர்களிடம் நன்கொடை வசூல் செய்து, விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள் சில மாதர்கள்.

மடிசார் கட்டிய நூற்றுக்கும் மேற்பட்ட சுமங்கலிகளைப் பார்ப்பதே, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அத்தனை பேர்களும் அம்பிகையின் திருவுருவங்கள் என்று பாவம். சுவாஸிந்யர்ச்சனப்ரீதாயை நம: - என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம்.

இலையில், என்ன இனிப்புப் பரிமாறுவது என்று சர்ச்சை. பூந்தி லட்டுக்கு அதிக ஆதரவு கிடைத்தது.

சுமங்கலிகள் உணவருந்திக் கொண்டிருக்கும் காட்சியைக் காண வந்தார்கள் பெரியவாள்.

ஒரு பூந்திலட்டைக் கையில் எடுத்தார்கள். “இதற்கு நான் ஐம்பது மார்க்தான் போடுவேன்” என்றார்கள்.

நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய (என் தாயார் உட்பட) அத்தனைப் பெண்மணிகளுக்கும் , பெரியவாளின் ரிமார்க் பேரதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு சிரத்தையுடன் ஒவ்வொரு காரியத்தையும் செய்திருக்கிறார்கள்? பெரியவாளே குறை காணும்படியாக என்ன தவறு நேர்ந்திருக்கிறது? – என்று கலக்கம் அடைந்தார்கள். ‘இன்னும் கொஞ்சம் பெரிய சைஸில் போட்டிருக்கலாமோ? என்று ஒரு சந்தேகம்.

பெரியவாள், அவர்களை வெகுநேரம் தவிக்கவிடவில்லை. உடனேயே, “ஏனென்றால், லட்டுவிலுள்ள மணிகளெல்லாம் உருண்டையாக இருக்கணும்; தட்டை தட்டையாக இருக்கக் கூடாது. இந்த லட்டுக்களில், உருண்டை மணி பாதி அளவு; தட்டை மணி பாதி அளவு. அதனால், பாதி மார்க்!” என்றாரே பார்க்கலாம்.
கொள்ளைச் சிரிப்பு!

பெரியவாளுக்குச் சிந்திக்க வைக்கவும் தெரியும்; சிரிக்க வைக்கவும் தெரியும்! இதற்கு ஐம்பது சதவீதம் - அதற்கு ஐம்பது சதவீதம் மார்க் போடலாம்.
இல்லை, இல்லை, இரண்டுக்குமே சதம் – சமம் தான்!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

Source:uma