திருவரங்கத்தந்தாதி 11 மாதங்கம் இவ்வளவு பொருளா ?
மாதங்கத்தானையரங்கனை வஞ்சனிலங்கையிலே
மாதங்கத்தானையிருதிங்கடாழ்த்துப்பின்வாம்பரிதேர்
மாதங்கத்தானைவலத்தானைமுன்வதைத்தானைத்தன்பான்
மாதங்கத்தானைவைத்தானை வைத்தேனென்மனத்தே
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
பதவுரை :
மாதங்கம் தானை மாற்றுயர்ந்த பொன் ஆடையை உடைய
அரங்கனை ரங்கநாதனை
வஞ்சன் இலங்கையிலே வஞ்சக் ராவணனுடைய இலங்கையில்
மா தங்க சீதா பிராட்டி தங்கி இருக்க
தான் இராமன்
ஐ இரு திங்கள் தாழ்த்து பத்து மாதங்கள் கழித்து
பின் பின்னால்
வாம் பரி தாவி செல்லும் குதிரைகள்
தேர் இரதங்கள்
மாதங்கம் யானைகள்
தானை காலாட்படைகள்
வலத்தானை இவைகளின் பலமுடைய் சேனையை
முன் வதைத்தானை முன்பு அழித்தவனை
மாது அங்கத்தானை உமாதேவியை உடலில் கொண்டுள்ள சிவனை
தன்பால் தனது வலப்பக்கத்தில் வைத்துள்ள திருமாலை
என் மனத்தே என் மனதில்
வைத்தேன் நிலையாக வைத்து விட்டேன்
Bookmarks