சென்னையில் தங்கியிருந்த காலகட்டத்தில், தம்புச் செட்டித் தெருவிலிருக்கும் சங்கரமடம், திருவொற்றியூர் கோயிலிலுள்ள சிலா சாஸனங்கள், சுவர்ச் சித்திரங்கள் ஆகியவற்றைப் படம் எடுக்கச் சொல்லி உத்தரவாயிற்று.

ஆதிசங்கரர், காஞ்சி க்ஷேத்திரத்தில் ஸர்வக்ஞ பீடாரோஹணம் செய்து, கடைசிவரை அங்கேயே தங்கியிருந்தார் என்பதற்கான பல சான்றுகளுடன், திரு.ரமேசன் (இ.ஆ.ப.) எழுதிய புத்தகத்தில் நான் எடுத்த புகைப்படங்கள் இடம்பெற்றன.

பெரியவாள், சென்னையை அடுத்த காட்டுப் பள்ளியில் தங்கியிருந்த காலம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபெரியவாளுக்குக் கனகாபிஷேகம் செய்யப்பட்ட போது, தங்கத்தாலான வில்வங்களை அபிஷேகம் செய்தார்கள். அதில் ஒரு வில்வத்தை வாங்கிக்கொண்டு வந்திருந்தார் என் தாயார். பெரியவாள் கையில் கொடுத்து, அவர்கள் ஆசீர்வாதத்துடன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்ளூர விருப்பம்.
பெரியவாளிடம் அந்தத் தங்க வில்வத்தை சமர்ப்பித்தார் என் தாயார்.

இதை எனக்கே கொடுத்துவிடேன்!...

என் தாயாருக்கு உடம்பு சிலிர்த்தது.

பதிலாக, நான் உனக்கு ஒரு புஷ்பம் தருகிறேன்..!

பெரியவா கொடுத்த புஷ்பத்தை, நவரத்தினமாகக் கருதி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் என் தாயார்.

இவ்வாறு பல பேர்களிடம், குந்துமணி குந்துமணியாகத் தங்கம் பெற்று, ஒரு சொம்பு செய்து, அதில் தேனை நிரப்பி, பூஜை மந்திர ஜபம் செய்யச் செய்து (ஆஞ்ஜநேய மந்திரம் என்று நினைவு). பாரதநாட்டின் வடமேற்கு எல்லையில் நடந்து கொண்டிருந்த போரில், பாரத வீரர்களுக்குத் தைரியம் ஊட்டுவதற்காக அனுப்பி வைத்தார்கள். அந்தப் போரில் நமக்கே வெற்றி கிடைத்தது.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
Source:uma2806