வேதம் -வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்ன? -Part 4

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இப்படித்தான், வேதத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் பார்த்துவிட்டுவந்த ஒருத்தர். என்னிடம் சொன்னார்:'வேதம் சொல்லவந்த முக்ய ஸமாசாரம் என்னவென்றால் Fire Worship (அக்னி உபாஸனை) தான். வேதம் உபக்ரமத்தில், அதாவது ஆரம்பிக்கும்போது 'அக்னிமீளே' என்று சொல்கிறது. கடைசியில் உபஸம்ஹாரம் பண்ணி முடிக்கிறபோது அக்னி என்றே முடிகிறது. கடைசியில் உபஸம்ஹாரம் பண்ணி முடிக்கிறபோது அக்னி என்றே முடிகிறது.

ஆரம்பம், முடிவு இரண்டும் அக்னிதான். ஆனபடியால், வேதத்தின் தாத்பர்யம், gist (ஸாரம்) fire worship தான் என்று அவர் சொன்னார்.

இதிலேயும் ஒரு உண்மை இருக்கிறது. அக்னி இருப்பது ஆத்ம சைதன்யம்தான்; அறிவொளிதான். அறிகிறவனாகவும் அறியப்படுவதாகவும், அறிவாகவும் இருக்கிற ஒரே ஆத்ம சைதன்யம்தான் வேதத்தின் பரம தாத்பரியம்.

ஆனால் வார்த்தைப்படி (literal -ஆக) எடுத்துக் கொண்டு, அக்னி உபாஸனைதான் தாத்பர்யம் என்றால் சரியில்லை. ஏதோ ஒரு தேவதா உபாஸனைதான் பெரிசு என்று சொல்லாததுதான் வேதத்தின் பெருமை. எல்லா தேவதைகளாகவும் இருக்கிற ஆத்மாவையே பிரியமானதாக உபாஸிக்க வேண்டும் என்றுதான் வேதம் (பிருஹதாரண்யகம் 1.4.8.) சொல்கிறது. "ஆத்மாவே பார்க்கப்பட வேண்டும். ஆத்மாவே கேட்கப்படவேண்டும். ஆத்மாவே மனனம் செய்யப்பட்ட வேண்டும்.

ஆத்மாவே அநுபவித்து அறியப்பட வேணடும். அதனாலேயே எல்லாம் அறியப்பட்டதாகும்"என்றுதான் யாக்ஞவல்கியர் மைத்ரேயிக்குச் செய்கிற உபதேச வாயிலாக, நம் எல்லாருக்கும் வேதமானது முடிவான goal -ஐ (லக்ஷ்யத்தை) ச் சொல்கிறது. Goal (குறிக்கோள்) என்று ஒன்றைச் சொல்லவேண்டுமானால், 'இப்போது நாம் இருக்கிற இடம் வேறு;இந்த ஆரம்பத்திலிருந்து நாம் அந்த முடிவான இடத்துக்குப் போயாக வேண்டும்'என்ற கருத்து அதில் தொக்கி நிற்கிறது.

"அத:" என்று 'அது'வாகத் தூரத்தில் சுட்டிக் காட்டப்படுவது கோல்;'இதம்' என்று இதுவாக இப்போது நாம் இருக்கிற நிலைதான் ஆரம்ப ஸ்தானம். இங்கேயிருந்து அங்கே போயாக வேண்டும்.

ஆனால் வாஸ்தவத்தில் அந்த லக்ஷ்யம் (அது) இங்கே (இது என்பதில்) இல்லையா?இருக்கத்தான் செய்கிறது. எல்லாம் பிரம்மந்தான் என்று தெரிந்து கொள்கிற போது 'அது', 'இது' இரண்டுமே பிரம்மந்தான்; அதாவது இரண்டுமே ஒன்றுதான். 'அது', 'இது' என்ற இரண்டுகூட இல்லவே இல்லை. 'இது' என்று இப்போது நாம் சொல்வதே 'அது' என்று இப்போது நினைக்கிற ஸத்யவஸ்துவாக, முடிவிலே ஆகிவிடுகிறது.

"அத:" என்ற மாதிரியே, "தத்" என்றும் பரமாத்மாவைச் சொல்வது வேதத்தின் வழக்கம். "தத்"என்றால் 'அது' என்றே அர்த்தம். "ஓம் தத் ஸத்" என்று எந்தக் காரியத்தையும் முடிப்பதற்கு, 'தத்'தாக உள்ள அது ஒன்றே ஸத்யம் என்று அர்த்தம்.

புருஷத்வம், மஹத்வம் (மகத்துவம்) என்பது போல் பல வார்த்தைகளை முடிவில் 'த்வம்' சேர்த்துச் சொல்கிறோம். இங்கே 'த்வம்' என்பதற்குத் தன்மை என்று பொருள். மஹத்தின் தன்மை மஹத்வம். புருஷனின் தன்மை புருஷத்வம். ஸரி, தத்வம், தத்வம் என்று ஸத்யமான முடிவுகளைச் சொல்கிறோமே! இது எப்படி? 'தத்வம்' என்றால் தத்-த்வம், அதாவது 'தத்'தினுடைய தன்மை என்று பொருள். தத்வ விசாரம், தத்வ உபதேசம் என்பவற்றிற்கு, பிரம்மமான தத்தினுடைய தன்மையை விசாரிப்பது, தத்தினுடைய தன்மையை உபதேசம் செய்வது என்பதே பொருள்.

வேதம் தத் என்று பரம்பொருளைத் தூரத்திலுள்ள 'அது'வாக சொல்கிறது என்றால், நமக்கு அதனால் என்ன பயன்?அப்படி இல்லை. வெகுதூரத்தில் இருக்கிறவர்தாம் மிகவும் அருகில் இருக்கிறார்" - தத்தூரே தத்வந்திகே" என்று வேதம் உணர்த்துகிறது. கல்யாணம் ஆகவேண்டிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளுடைய பெற்றோர் பந்துக்களுக்குள்ளேயே முறைப் பையனைப் பார்த்து அவனுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் தீர்மானித்திருந்தார்கள். ஆனால் அந்தப் பெண், "புருஷர்களில் எல்லாம் உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்" என்று பிடிவாதம் பண்ணினாள். அவர்களும், "உன் இஷ்டப்படியே போ!" என்று விட்டு விட்டார்கள்.

அந்தப் பெண், 'புருஷர்களுக்குள்ளேயே உயர்ந்தவன் ராஜாதான். கல்யாணம் பண்ணிக்கொண்டால் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்'என்று தீர்மானம் பண்ணிக் கொண்டு, அவ்வூர் ராஜா பின்னாலேயே போய்க் கொண்டிருந்தாள்.
ஒரு நாளைக்கு ராஜா பல்லக்கில் போய்க் கொண்டிருந்த போது ஒரு சாமியார் எதிரே வந்தார். ராஜா பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி, அந்தச் சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பவும் பல்லக்கில் ஏறிக்கொண்டு போனான்.

Contd...5...
Source: subrada