தக்காளி ஊறுகாய்
தக்காளி மலிவாக கிடைக்கும் போது அதனை வாங்கி ஊறுகாய் போட்டு வைத்துக் கொள்ளலாம். எளிதாக வீணாகும் இதுபோன்ற காய்கறி வகைகளில் ஊறுகாய் போட்டு நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேவையானவை
தக்காளி - கால் கிலோ
மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
கடுகு - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 3 சிட்டிகை
நல்லெண்ணெய் - ஒரு கப்
செய்முறை
தக்காளியை கழுவி ஈரமில்லாமல் துடைத்து நறுக்கிக் கொள்ளவும்.
அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக குலுக்கி ஒரு நாள் முழுவதும் மூடி வைக்கவும்.
அடுத்த நாள் அதனை வெயிலில் வைக்கவும். பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரையும் வெயிலில் வைக்கவும்.
தினமும் இவ்வாறு செய்து தண்ணீர் நன்கு தக்காளியில் ஊறும் வரை உலர்த்தி எடுக்கவும்.
1 வாரம் கழித்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு, வெந்தயம் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
ஊறிய தக்காளியில், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த பொடி ஆகியவற்றை நன்கு கிளறி வைக்கவும்,
பிறகு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பெருங்காயம் சேர்க்கவும், அதில் மசாலா சேர்த்து வைத்துள்ள தக்காளியைப் போட்டு கிளறவும். மிளகாய் தூள் வாசனை போகும் வரை கிளறி இறக்கவும்.
காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் பயன்படுத்தலாம்.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Source:harikrishnamurthy
Vanisri Sivakumar
Bookmarks