திருவரங்கத்தந்தாதி 13 துவரை மன்னன் அடியார் வருந்துவரோ ?
வருந்துவரைப்பட்ட மங்கையரெண்மர் மனங் களைக்க
வருந்துவரைப்பட்ட வாயரங்கேசனைவஞ்சப்பகை
வருந்துவரைப்பட்டவேழமட்டானைமறந்துலகோர்
வருந்துவரைப்பட்டவீப்போன்மடந்தையார்மால்வலைக்கே
சிறப்பு : பட்டத்து ராணியின் மனதைக்கவர்ந்தவர்
பட்டத்து யானையின் உயிரைக் கவர்ந்தவர்
பட்ட துன்பங்களைக் களைவார் !
பதவுரை :
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
துவரை வரும் துவாரகைக்கு வந்து சேர்ந்த
பட்டம் மங்கையர் எண்மர் பட்டத்து தேவிகள் எட்டு பேர்களுடைய
மனங்களைக்கவரும் உள்ளங்களை இழுக்கின்ற
துவரை பட்ட வாய் செந்நிறமான வாயை உடைய
அரங்க ஈசனை ரங்கநாதனும்
வஞ்சப் பகைவர் உந்து வஞ்சகமான விரோதிகள் செலுத்திய
வரைப் பட்ட வேழம் மலை போன்ற குவலயாபீடம் எனும் பட்டத்து யானையை
அட்டானை கொன்றவனுமான திருமாலை
மறந்து நினைக்காத
உலகோர் மக்கள்
ஐ பட்ட ஈ போல் கோழையில் சிக்கிய ஈ போல
மடந்தையர் மால் வலைக்கே பெண்களின் மோஹவலையில் சிக்கி
வருந்துவர் துன்பப்படுவர்
Bookmarks