சரி! நன்னா போடு! வேதப்ராம்ஹணா குக்ஷில விழற ஒவ்வொரு அன்னமும் உனக்கு ச்ரேயஸை கொடுக்கும், பக்ஷணங்களெல்லாம் போடு! என்றதும் தனிகருக்கு சந்தோஷம். பெரியவா ஆக்ஞைபடி அப்படியே செய்றேனென்றார். உங்க ஊர்லயே பண்ணப்போறயோ! என்றார் பெரியவா.பெரியவா எங்க உத்தரவு பண்றாளோ அங்கயே செய்ய சித்தமாயிருக்கேனென்றார். திருவிடமருதூர்ல பண்ணு! முடிஞ்சா வர பாக்கறேன்! என்றதும் வந்தவருக்கோ பூமி நழுவிற்று.
இப்படியொரு பாக்யமா! என கண்ணீர் மல்கியபடியே ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு போய்விட்டார்.
பெரியவா சொன்ன திருநாளும் வந்தது.
ஏற்பாடுகள் மிகச்சிறப்பான முறையில் நடைப்பெற்றது. பெரியவா இங்கு வரப்போவதின் அறிகுறியும் தெரிந்தது. அனைவரும் வெகு உற்சாகமாய் பணி செய்தனர். 100 வேதப்ராம்ஹணர்கள் வந்தனர். அவர்களுக்கு உயரிய முறையில் உபசாரம் செய்யப்பட்டது. பெரியவா வருகை! வேத கோஷம் விண்ணைப்பிளந்தது.
அவாளுக்கு இலை போடு என்றார். தஞ்சை மாவட்டமாச்சே, தாட்டு இலை போடப்பட்டது. பரிமாறினர். ராஜபோஜனமாகயிருந்தது. 5 வகை ஸ்வீட் பேணி, லட்டு, அல்வா, போளி, மைசூர்பாகு. இதை தவிர நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல். இதேபோல் எல்லாமும்.தனிகரின் கையோ முறம் போலுள்ளது. ரசம் போட்டு ஸ்வீட் போட்டு, சர்க்கரைப் பொங்கலிட்டு அதன் மேல் உருக்கிய நெய் வார்க்கப்பட்டது. அனைவருக்கும் திணறியது. சாப்பிடவே முடியவில்லை. பின் வேண்டியவர்களுக்கு அன்னமிடப்பட்டு சந்திரன் போன்ற வெளுத்த தயிர் விடப்பட்டது.
இப்போது பெரியவா சாப்பிடுமிடத்திற்க்கு வந்தார். எங்கும் பரபரப்பு. பரிமாறும் அன்பர்களை விளித்து ஏதோ பேசினார்.
ஒருபெரிய சாட்டாங்கூடை நிறைய லட்டு கொண்டு வரப்பட்டது. அங்கே முன்னின்று, Уஎல்லார் எலேலயும் நவ்வாலு லட்டு போடுФ என்றார்.
அனைவரும் முழித்தனர். இலையிலேயே அதிகமாகயிருக்கிறது; உபரியாக நாலு லட்டு வேற எப்படி சாப்பிடுவது. பெரியவா போடச் சொல்லி போட்டார்கள், எறிந்தால் பெரியவாளுக்கு மரியாதைகுறைச்சலாகிவிடும், சாப்பிடவோ வயிற்றில் இடமில்லை. செய்வதறியாது திகைத்தனர்.
இதை காண சகியாத கருணைக்கடல், Фமுடிஞ்சா சாப்பிடுங்கோ முடியலைன்னா எறிஞ்சுடலாம் தோஷமில்லைФ என்றார்.
அப்பாடா! பெரியவாளே சொல்லிட்டா எறிஞ்சா தப்பில்லேன்னு! என்று சமாதானம் செய்து கொண்டு கொஞ்சம் போல எடுத்துக்கொண்டு எழுந்து விட்டனர்.
தனிகருக்கோ மிகுத்த வருத்தம் உபரியாக போடச்சொல்லி, அதை எறியவும் சொல்லிவிட்டாரே என.
Bookmarks