திருவரங்கத்தந்தாதி 15 மானிடர்க்கு எது அரிது ?
மானிடராகவரலரிதோர்மண்டலத்தினெறி
மானிடராகமிலாதவராதன்மலரயனார்
மானிடராகமத்தாலன்பராயவரங்கத்துளெம்
மானிடராகமலரடிக்காட்படும்வாழ்வரிதே
பதவுரை :
ஓர் மண்டலத்தின் இந்நிலவுலகில்
மானிடர் ஆக வரல் மனிதராய் பிறத்தல்
அரிது அருமையானது
இடர் ஆகம் துன்பம் மிக்க சரீரம்
இலாதவர் இல்லாதவராக
ஆதல் அரிது பிறத்தல் அதைவிட அருமையானது
நெறிமான் நீதிஉடையவனாக
ஆதல் அரிது பிறத்தல் அதைவிட அருமையானது
மலர் அயனார் தாமரையில் வந்த பிரமனும்
மான் இடர் மானை இடது கையில் ஏந்தும் சிவனும்
ஆகமத்தால் முறைப்படி
அன்பர் ஆய தொண்டு செய்யும் இடமான
அரங்கத்துள் திருவரங்கத்துள் இருக்கும்
எம்மான் எம்பெருமானுடைய
இடம் ராகம் பெருமையுள்ள, சிவந்த
மலர் அடிக்கு தாமரை மலர் போன்ற திருவடிகளுக்கு
ஆள் படும் அடிமை செய்யும்
வாழ்வு அரிதே வாழ்க்கை பெறுதற்கு அருமையானதே
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks