அர்த்தோதயம்,மகோதயம் :

தை,மாசி மாதத்திலே அமாவாசை நாள் உதய காலத்தில் ,ஞாயிற்றுகிழமையும் வியதீபாதமும்,சிரவணமும் கூடினால் ,இது அர்த்தோதயம்.இதில் சமுத்திர ஸ்நானம்
செய்யில் கோடி சூரியகிரகண புண்யகால பலன் உண்டு .
தை,மாசி மாதங்களில் ஞாயிற்றுக்கிழமையில் அமாவாசை பூர்வ பாகமும் வியதீபாதத்தின் கடைசியும் திருவோணம் 2ம் பாதமு,சூரிய உதய காலத்தில் கூடினால் அற்தோ தயமுண்டு . திங்கட்கிழமை கூடினால் மகோதயம்


யாத்திரைக்கு 21 (ஏகவிம்சதி) மஹா தோஷங்கள் :


1.பஞ்சாங்க சுத்தி இல்லாதது. 2.சந்திர தாரா பலமில்லாதது 3.லக்ன தோஷம் 4.கிரகபல தோஷம் 5சாத்வீக வேளை 6.துர்முஹுர்த்தம் 7.ஹோரை 8.சந்திராவஸ்தை 9திரியம்பகம் 10.அடல பிரமணம் 11.பந்தா ராகு 12சந்திர கண்டம் 13லலாடம் 14பரிசம் 15தண்டம் 16அபசகுனம் 17சந்திர சூலை 18யாத்ரா பஞ்சகம் 19யாத்ராபணி 20குளிகன்
21 யோகினி --இந்த 21 தோஷங்களையும் யாத்திரையில் நீக்கவும்..


அபிஜித் முஹுர்த்தம் :


சூரியன் நடுப்பகலில் உச்சியில் இருக்கும்போது (15நாழிகை வேளை ) அபிஜித் முஹுர்த்தம்.எல்லா தேசங்களுக்கும் ஏற்க்க தக்கது. ஆகையால் அபிஜித் முஹுர்த்தத்திலே
சௌளம் ,உபநயனம் மாத்திரம் நீக்கி மற்ற எல்லாவித சுபகர்மாக்களும் செய்யலாம்.


சந்திர கண்டகம்:


மேஷமும்,ரிஷபமும் மேற்கு .மிதுனம் வாயு.கடகம்,சிம்மம் வடக்கு.கன்னி ஈசானம்.துலாம்,விருச்சிகம் கிழக்கு.தனுசு அக்னி.மகரம்,கும்பம் தெற்கு.மீனம் நிருதி .இவ்விதம் கண்டறிந்து சந்திரன் எந்த ராசியில் இருக்கிரதோ அந்த ராசி திக்கில் யாத்திரை செய்யக்கூடாது. இதுதான் சந்திர கண்டகம் .

தனிஷ்டா பஞ்சமி :


(இறந்தால் வீடு மூட வேண்டிய நக்ஷத்திரங்கள் )

அவி-சத-பூர-உத்திரட் -ரேவ 6 மாதமும்,ரோக-4 மாதம்,கார்-உத்ரம் 3மாதம் ,மிரு-புன-சித்-விசா-உத்ரா 2மாதம்.பரிகாரம் வெங்கலகிண்ணத்தில் நல்லெண்ணெய் விடுத்து தானம்செய்து குறித்தகாலம் வரை கற்பூர தீபம் காட்டவும்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
source :- பல்வேறு பஞ்சாங்கங்கள்