திருவரங்கத்தந்தாதி 16 அரங்கன் பாதம் அடைமின் !
அரிதாமரைக்கணந்தோலுடுத்தாரயனார்க்கரியான்
அரிதாமரைக்கணம்மான்றிருப்பாதமடைமின்சன்மம்
அரிதாமரைக்கணந்தங்காதுயிரவனூர்வினவில்
அரிதாமரைக்கணமீர்த்தோடும்பொன்னியரங்கமன்றே
பதவுரை :
அரி இந்திரனாலும்
தாம் அரைக்கண் தனது இடையில்
அம தோல் அழகிய புலித்தோலை
உடுத்தார் உடுத்தியுள்ள சிவனாலும் ,
அயனார்க்கு பிரமனாலும்
அரியான் அறிவதற்கு அரியவனும்,
அரி ஹரி என்ற பெயர் உடையவனும்,
தாமரைக்கண் தாமரை போன்ற கண்ணுடைய வனுமான
அம்மான் எம்பெருமானுடைய
திரு பாதம் திருவடிகளை
அடைமின் சரண் அடையுங்கள்.செய்தால்
சன்மம் அரிது ஆம் மறு பிறப்பு இருக்காது
உயிர் உயிர்
அரைக்கணம் தங்காது வேறொரு உடம்பில் கணம் கூட இருக்காது
அவன் ஊர் வினவில் அவனுடைய ஊர் கேட்டால்
அரி சிங்கங்களையும்
தாம் மரைக்கணம் தாவும் மான்களின் கூட்டத்தையும்
ஈர்த்து ஓடும் இழுத்துக்கொண்டு ஓடி வரும்
பொன்னி காவேரி நடுவில் உள்ள
அரங்கம் அன்றே திரு அரங்கம் அல்லவா ?
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks