* செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் மகாலட்சுமி தாயே! திருமாலின் மார்பில் உறைபவளே! புத்தாண்டில் எல்லா வளமும் நலமும் எங்களுக்கு தந்தருள்வாயாக.
* அஷ்டலட்சுமி தாயே! கல்வி, தனம், தான்யம், சந்தானம், வீரம், ஜெயம் ஆகிய எல்லா செல்வங்களையும் எங்களுக்கு வாரி வழங்குவாயாக.
* திருப்பாற்கடலில் உதித்தவளே! வேதம் போற்றும் விமலையே! ஆருயிர்க்கெல்லாம் அன்னையே! சரணடைந்தவர்களைக் காக்கும் திருமகளே! நாங்கள் தொழில், வியாபாரம், பணி அனைத்திலும் மேன்மை பெற்று விளங்க கடைக்கண்ணைக்
காட்டியருள்வாயாக.
* நவரத்தின மகுடம் சூடியிருப்பவளே! சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளே! எழிலரசியே! விஷ்ணுவின் துணைவியே! பக்தர் திலகமே! உன் அருளால் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்.
* விஜயலட்சுமியே! எங்கள் இல்லத்தில் நிலையாக வீற்றிருப்பாயாக! உன்னருளால் செல்வவளமும், செயலில் வெற்றியும் எங்களுக்கு கிடைக்கட்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends