* அநாதைகளுக்கு அவர்களுடைய
உடைமைகளைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள். நல்ல பொருளுக்குப்
பதிலாக தீய பொருளை மாற்றாதீர்கள். மேலும், அவர்களின் பொருட்களை
உங்கள் பொருட்களோடு கலந்து உண்ணாதீர்கள்.
திண்ணமாக இது பெரும் பாவமாகும்.
* அநாதைகளை அவர்கள் திருமணப் பருவத்தை
அடையும் வரை சோதித்து வாருங்கள். அவர்களிடம்
(பகுத்துணரும்) தகுதியை நீங்கள் கண்டால்
அவர்களுக்குரிய உடைமைகளை அவர்களிடமே
ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி
(தங்களின் உரிமைகளைக் கேட்டு) விடுவார்களென அஞ்சி அந்த உடைமைகளை நீதிக்குப் புறம்பாக, வீண் விரயமாக, அவசரமாக விழுங்கி விடாதீர்கள்.
* அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வந்தராக
இருந்தால், அவர் அநாதைகளின் சொத்துக்களில் இருந்து உண்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர்
ஏழையாக இருந்தால் (தமது சேவைக்காக) நியாயமான அளவோடு உண்ணலாம்.
* அவர்களின் சொத்துக்களை அவர்களிடம்
ஒப்படைக்கும் போது அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், கணக்கு கேட்பதற்கு இறைவன் போதுமானவன்.
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks