பெண்கள் தர்பனம் செய்யாலாமா?


தர்பனம் என்பது நமது பிதுர்களை நம் இல்லங்களுக்கு வரவழைத்து அவர்களின் ஆசிர்வாதங்களை பெறுவதே ஆகும். வம்சாவழி தத்துவப்படி, ஆண்கள் தன் மகனின் மகன், அவனின் மகன் இப்படியாக ஏழு தலைமுறை வரை அவர்களின் ஆசிர்வாதங்கள் தொடரும். மகளின் வழி குழந்தைகளுக்கு இது கிடைக்காது. எனவே ஆணின் விந்துவே ஒரு உயிரை உற்பத்தி செய்ய முதல் காரணமாகின்றது. இதன் படி தான் வம்சம், குடும்ப வழி, கோத்திரம், சூத்திரம், உற்பத்தியாகின்றது. எனவே பித்ரு தர்பனங்களை ஆண்வழி ஆண் சந்ததியினரே செய்ய இடம் உள்ளது.
கணவனை இழந்த பெண்கள் தர்பனத்தை செய்யலாம், அதுவும் எதுவரை என்றால் அவளின் மகன் வளர்ந்து தர்பன காரியங்களை ஏற்று நடத்தும் வரை. மகன் இல்லாத விதவை பெண்கள் அவர்கள் உயிர் விடும்வரை கூட இறந்த தன் கணவனுக்காக தர்பனம் செய்யாலாம். விதவைகள் மறுமணம் செய்துகொண்டாலோ அல்லது வேறு ஒருவருடன் தாம்பத்ய உறவு மேற்கொண்டாலோ இந்த காரியங்களை செய்யவே கூடாது. கணவன் உள்ள பெண்கள் அமாவாசை அன்று தர்பனகாரியங்களில் இடுபடகூடாது. .---

M.பாலசுப்ரமணியன், நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends