திருவரங்கத்தந்தாதி 19 அரங்கனுக்கு அன்பராகி அடைவீர் ஆனந்தமே !

ஐயமருந்திவையுண்ணென்றுமாதரட்டூட்டுஞ்செல்வம்
ஐயமருந்தினைப்போதேயவரின்பமாதலின்
ஐயமருந்தியக்கங்குருகாமுன்னரங்கற்கன்பாய்
ஐயமருந்தியும்வாழ்மின்கண்மேலுமக்கானந்தமே

பதவுரை :

ஐய ஐயனே !
இவைஇவ்வுணவுகள்
மருந்து அமிர்தம் போன்றவை

உண் சாப்பிடுங்கள்
என்று எனச் சொல்லி
மாதர் காதல் பெண்கள்
அட்டு ஊட்டும் சமைத்து உண்பிக்கும்
செல்வம் ஐஸ்வர்யம்
ஐயம் நிலையற்றது !
அவர் இன்பம்அவர்கள் கொடுக்கும் இன்பமும்
அருந் தினைப்போதே சிறிது காலத்ததே !
ஆதலினால் ஆதலால்
ஐ அமரும் தியக்கம் கோழையால் வரும் துன்பம்
குருகாமுன் ஏற்படுவதற்கு முன்னேயே
ஐயம் அருந்தியும் பிச்சை எடுத்து உண்டாலும்
அரங்கற்கு ரங்கநாதனுக்கு
அன்பு ஆய பக்தி கொண்டு
வாழ்மின்கள் வாழுங்கள் !
மேல் இனிமேல்
உமக்குஆனந்தமே உங்களுக்கு பரமானந்தமே !