பூஜ்யஸ்ரீ பரமானந்த பாரதி சுவாமிகள், இந்தியாவின் பல இடங்களிலும் வெளிநாடு களிலும் வேதாந்தங்களின், சாஸ்திரங்களின் அருமை பெருமைகளைப் பற்றி சொற்பொழி வாற்றி வருபவர். இவர் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஒரு கால கட்டத்தில் எல்லாவற்றையும் துறந்து சிருங்கேரி சங்கர மடத்தைச் சேர்ந்த மகாகுரு ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகளிடம் தீட்சை வாங்கி முறைப் படி சந்நியாசம் பெற்றார்.

ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர், மறைந்து வரும் சனாதன தர்மத்தை மக்களிடையே பரப்புவதில் தன்னை அர்ப்பணித்து வருபவர். புதுடெல்லியில் உள்ள சங்கர வித்யா கேந்திரா என்னும் ஸ்தாபனத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையவர். அந்த ஸ்தாபனம், இன்றைய நிர்வாகிகளிடமும் தொழிற்கல்வி விற்பன்னர் களிடமும் இன்றைய வாழ்க்கைக்குத் தேவை யான விஷயங்களை எடுத்துக் கூறி, இன்று நாம் காணும் பல விஞ்ஞான உண்மைகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எல்லாம் ஏற்கெனவே நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக்கூறி, நமது நாட்டின் பெருமையை- நமது சாஸ்திரங்களின் பெருமையை அவர்கள் மூலமாக மக்களிடையே பரப்பும் அரிய பணியில் ஈடுபட்டு வருகிறது.

எந்த மடத்தையும் சாராமல்- தனக்காக ஒரு மடமோ சிஷ்ய பரம்பரையையோ வைத்துக் கொள்ளாமல் தனியே இயங்கி வருகிறார் பரமானந்த பாரதி சுவாமிகள்.

சிறப்பான ஆன்மிகப் பணியை மேற்கொண்டு வரும் இவர், அண்மையில் சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம மண்டலி என்னும் அமைப்பின் அழைப்பின் பேரில் சில இடங்களில் பிரசங்கங்கள் நடத்தினார். அதிலிருந்து...

""முக்தி அடைந்தவர்களுக்கு மட்டுமே மறுபிறப்பு இல்லை. மற்ற எல்லாருக்கும் மறுபிறப்பு உண்டு. மறுபிறப்பில் ஆணாக இருந்தவர்கள் பெண்ணாகப் பிறக்கலாம்; பெண்ணாக இருந்தவர்கள் ஆணாகப் பிறக்கலாம். அவரவர் செய்த பாவங்க ளின் அளவைப் பொறுத்து, புழு பூச்சியாக, விலங்குகளாகவும் பிறக்கலாம். மறுபிறவி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்குமே உண்டு. இந்தப் பிறவியில் செய்த பாவ- புண்ணிய அளவுகளைப் பொறுத்தே இறந்த பிறகு நரகத்திற்கோ சொர்க் கத்திற்கோ செல்கிறார்கள். அங்கேயும் குறிப்பிட்ட காலத்திற்குப்பின் (அவர் களின் பாவ- புண்ணிய அளவுகளைப் பொறுத்து) மீண்டும் மறுபிறவி எடுக்கி றார்கள்.

குழந்தை தாயின் கருவில் இருக் கும்போதே தாயின் செயல்களை- தாய் இருக்கும் சூழ்நிலைகளை உணர்ந்து வளர்ந்து வருகிறது. தாயின் நல்ல தன்மைகள்- அது நல்லதோ கெட்டதோ- குழந்தையையும் பாதிக்கிறது.

கருவில் இருக்கும் குழந்தையின் முக அசைவுகள், தாயின் செயல்களைப் பொறுத்து நடக்கிறது.

பிறந்த குழந்தைக்கு எவ்வாறு அழத் தெரிகிறது? எப்படி பால் குடிக்கத் தெரிகிறது? பூர்வ ஜென்மத்தில் செய்த செயல்கள் மறுபடியும் நினைவுக்கு வருகி றது. அதனால்தான் அந்தக் குழந்தையால் அவ்வாறு செய்ய முடிகிறது.v முட்டையில் இருந்து வெளிவரும் பல்லிக் குஞ்சு, அடுத்த விநாடியே தன் முன் காணும் ஈயைப் பிடித்து தின்னத் தொடங்குகிறது. அப்போதுதான் பிறந்த பல்லிக் குஞ்சுக்கு இரையைப் பிடிக்க யார் கற்றுக் கொடுத்தார்கள்? எல்லாம் முற்பிறவிகளின் நினைவே. அது இன்னும் மறக்கவில்லை. உறங்கும்போது மனிதன் ஏறக்குறைய மரண நிலையை அடைகி றான். சுவாசம் உள்ளேயும் வெளியேயும் போவது உண்மை. ஆனால் அவன் காணும் கனவு அவனை எவ்வளவோ தூரத்திற்கு அழைத்துச் செல்கிறது.

நீங்கள் யார்? கனவில் இருக்கும் இடத்தில் காணப்படும் நீங்களா? படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் நீங்களா?

இந்த இரண்டு நிலைகளிலும் ஒரே சமயத்தில் காணப்படும் உங்களின் உண்மையான நீங்கள் யார்?

உடல் வேறு; ஆன்மா வேறு. உடல் ஸ்தூலமானது. ஆன்மா சூட்சுமமானது. உடல் அழியக்கூடியது; ஆன்மா அழியாதது. ஆன்மாவானது இன்னொரு உடலில்- மிருகத்தின்- பறவையின் உடலில்கூட புகுந்துகொள்ளும்.

மறுபிறவி எடுப்பதற்கு உதவுவது ஆன்மா. ஆன்மா, ஒளியின் வடிவத்தில் விண்ணுலகு செல்கிறது. இறந்தவர்களின் சிரார்த்தத்தின்போது சூடாகப் பிண்டம் வைப்பது ஏன்? சாதத்தில் உள்ள சூடுதான் அந்தப் பிண்டத்தை நமது முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு எடுத்துச் செல்கிறது.

நரக லோகம், சொர்க்க லோகம் சென்ற ஆன்மாக் கள் அங்கிருக்க வேண்டிய காலகட்டம் முடிந்ததும் மழை வடிவில் மீண்டும் பூமிக்கு இறங்கி வருகின்றன. அந்த மழையினால் ஆறுகளில் நீர் பெருகுகிறது. அந்த நீரைப் பலர் குடிக்கிறார்கள். அந்த ஆற்று நீரைப் பயன்படுத்தி நெல், கோதுமை மற்றும் இதர பயிர் வகைகள், காய்கறிகள் முதலியவற்றை விளை விக்கிறார்கள். இந்த விளைபொருட்களை மனிதர்கள் உட்கொள்ளுகிறார்கள். விலங்குகளும் பறவைகளும் இன்ன பிற உயிரினங்களும் உட்கொள்கின்றன. அவற்றில் உள்ள சக்தி ஆணிடத்தில் விந்தணுக்களாக மாறுகிறது. பெண்ணுடன் உறவு கொள்ளும்போது கரு ஏற்பட தகுந்த சூழ்நிலை இருந்தால் கரு உருவாகி றது. குழந்தை பிறக்கிறது. இந்த நிகழ்ச்சி எல்லா உயிர்களிடமும் நடைபெறுகிறது.''

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendstobe continued;----