திருவரங்கத்தந்தாதி 20 நம் அரங்கனைப் பற்றினால் நரகம் இல்லை !

நந்தமரங்கனைமாகடலேழுநடுங்கவெய்த
நந்தமரங்கனைப்பற்றுநெஞ்சேவினைநையு முன்கை
நந்தமரங்கனையார்மயல்போம்வருநற்கதிவா
நந்தமரங்கனைவர்க்குமெஞ்ஞான்றுநரகில்லையே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை :

நெஞ்சே என் மனமே !
மரம் ஏழு நந்த ஏழு மராமரங்கள் அழியவும்
கனை மா கடல் ஒலிக்கின்ற பெரிய கடல்
ஏழு நடுங்க ஏழு அஞ்சி நடுங்கவும்
எய்த அம்பு தொடுத்த
நம் தம் அரங்கனை நம் ரங்கநாதனை
பற்று சரண் அடைவாய் !
வினை நையும் கருமங்கள் அழியும் !
முன் கை முன்னங்கைகளில்
நந்து அமர் சங்கு வளையல் அணிந்த
அங்கனையார் பெண்களிடம்
மயல் போம் மயக்கம் அழியும் !
நல் கதி சிறந்த பதவியான
வானம் வரும் வைகுண்டம் கிடைக்கும் !
தமர் அனைவர்க்கும் நம்மை சேர்ந்தவர்க்கும்
எஞ்ஞான்றும் எப்பொழுதும்
நரகு இல்லை நரகம் கிடையாது !