தேவையான பொருட்கள்:
எலுமிச்சம் பழம் - 1/2 கிலோ
உப்பு - 2 - 2 1/2 டேபிள் ஸ்பூன்
கருப்பு உப்பு - 2 - 2 1/2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 100 கிராம் ( தோல் சிவி துருவவும் )
மிளகாய் பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1/4 டீ ஸ்பூன்
ஓமம் - 3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 cup
கடுகு 1/4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பொடி 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, நான்காக பிளந்து வைக்கவும்.
ஒரு பேசினில் மற்ற சாமான்களை போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
இந்த மசாலாவை எல்லா எலுமிச்சங்காய்களிலும் அடைக்கவும்.
ஒரு ஈரம் இல்லாத ஜாடி இல் அடுக்கவும் .
அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.ஆனால் இதை 1 மாதம் கழித்து தான் உபயோகப்படுத்த துவங்கலாம்
அதுவரை தினமும்ஜாடி இன் வாயை மெல்லிய துணியால் கட்டி வெயிலில் வைக்கணும்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சப்பாத்தி , சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
Bookmarks