Announcement

Collapse
No announcement yet.

புளி உப்புமா / புளிப்பொங்கல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புளி உப்புமா / புளிப்பொங்கல்

    இதற்கும் அரிசியில் இருக்கும் நொய் என்னும் சின்னக் குருணை அரிசியே பொருத்தமாய் இருக்கும். இல்லை என்றால் அரிசியைக் களைந்து ஊற வைத்துக்கொண்டு மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ உடைத்துக்கொள்ளவும்.

    தேவையானவை :

    உடைத்த அரிசி அல்லது குருணை - 2 cup
    நல்லெண்ணெய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    வற்றல் மிளகாய் 4 -5
    உப்பு தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - கொஞ்சம்
    தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு எல்லாம் 1 ஸ்பூன் அளவில் எடுத்துக்கோங்கோ + ஒரு கைப்பிடி அளவு பச்சை வேர்கடலை
    பெருங்காயம் - அரை டீஸ்பூன்
    புளி ஜலம் - 3 கப் அல்லது புளி பேஸ்ட் 2 டீ ஸ்பூன்



    செய்முறை:

    ஒரு நான்ஸ்டிக் அல்லது இலுப்பச்சட்டில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை , பெருங்காயம் வேர்கடலை எல்லாம் தாளிக்கவும்.
    ஒரு கப்க்கு 2 முதல் 2 1/2 கப் தண்ணீர் என்று அளந்து கொண்டு, புளி ஜலம் + தண்ணீர் வாணலி இல் விடவும்.
    உப்பு போடவும்.
    அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கிவிட்டு, உடைத்து வைத்துள்ள குருணையை அதில் போடவும்.
    நன்கு கிளறவும்.
    மேலே ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.
    அப்பப்போது ஒருமுறை கிளறி விடவும்.
    தண்ணீர் தேவையானால் விடவும்.
    ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.
    வெறும் தயிர அல்லது ஒன்றுமே கூட வேண்டாம் இதற்கு , அப்படியே ரொம்ப நல்லா இருக்கும்

    http://www.brahminsnet.com/forums/sh...AE%9F%E0%AF%8D For புளி பேஸ்ட் click here.

    Click image for larger version

Name:	25042013264.jpg
Views:	1
Size:	61.9 KB
ID:	34709
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: புளி உப்புமா / புளிப்பொங்கல்

    புளி உப்புமா

    புளி உப்புமாவுக்கு ஊறுகாய் மிளகாய் போடலாம் அல்லவா? இந்த மிளகாய் இல்லாவிட்டால் வற்றல் மிளகாய் போடலாம் என்று சொல்கிறார்களே.

    Comment


    • #3
      Re: புளி உப்புமா / புளிப்பொங்கல்

      Originally posted by P.S.NARASIMHAN View Post
      புளி உப்புமா

      புளி உப்புமாவுக்கு ஊறுகாய் மிளகாய் போடலாம் அல்லவா? இந்த மிளகாய் இல்லாவிட்டால் வற்றல் மிளகாய் போடலாம் என்று சொல்கிறார்களே.
      நான் வத்தல் மிளகாய்தான் போட்டிருக்கேன் மாமா, இதுக்கு மோர் மிளகாய் நன்னா இருக்காது
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      Working...
      X