திருவரங்கதநதாதி 22 அஞ்சக்கரத்தான் அஞ்ச, கரத்தலை செய்த அஞ்சக்கரத்தான் தாளே அரண் !


அஞ்சக்கரத்தலைக்கங்கையனேற்றலுமஞ்சிறைய
அஞ்சக்கரத்தலைக்குண்டிகையான்மண்டையங்கைவிட்டே
அஞ்சக்கரத்தலைச்செய்துபித்தேகவருளரங்கன்
அஞ்சக்கரத்தலைவன்றாளலான்மற்றரணிலையே


பதவுரை : அஞ்சக்கரத்தான் யார் ? (சிவன் /விஷ்ணு)


அஞ்சு அக்கரம் பஞ்சாக்ஷரத்துக்கு உரியவனும்,
தலை கங்கையன் தலையில் கங்கையை உடையவனுமான சிவன்
ஏற்றலும் வேண்டியவுடன்
அம் சிறைய அழகிய சிறகுகள் உடைய
அஞ்சம் ஹம்ஸத்தை வாஹனமாய் உடையவனும
கரத்தலை கைகளில்
குண்டிகையான் கமண்டலத்தை உடையவனுமான பிரமனின்
மண்டை கபாலம்
அங்கை விட்டே சிவனது கைகளிலிருந்து
கரத்தலை செய்து மறையச் செய்து
அஞ்சப்பித்து ஏக பயமும் கலக்கமும் ஒழியும்படி
அருள் கருணை செய்த
அம் சக்கர அழகிய சக்ரத்தை உடைய
தலைவன் அரங்கன் இறைவன் ரங்கநாதனுடைய
தாள் அலால் திருவடி இல்லாது
மற்று அரண் இல்லை வேறு பாதுகாப்பு இல்லை !
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends