இலங்கு அயில் ஆதரன் விளங்கும் வேலை விரும்பும் வேலனும் , ஐங்கரன் ஐந்து கைகளை உடைய கணபதியும் , மோடி துர்க்கையும் , எரி அக்கினியும் , சுரத்தோன் ஜுரதேவதையும் , இலம் கயிலாதமலை கைலாயமலையை இல்லமாக உடைய சிவனும் , இரிய அஞ்சி ஓட வெம் போரில் கடுமையான சண்டையில் அம் கை இலாதபடி அழகிய ஆயிரம் கைகள் இல்லாதபடி வாணனை செற்ற பாணாசுரனை அழித்திட்ட கண்ணனும் , இலங்கையில் இலங்காபுரியில் ஆதவன் போகக் கண்டான் சூரியனை உள்ளே போகச் செய்த ராமனும் ஆன என் அரங்கன் எனது ரங்கநாதன் என் இதயத்தன் என் இதயத்தில் உள்ளான்
Bookmarks