இப்பொழுது தேர்தல் சீர்திருத்தம் குறித்து விவாதிக்கப்படுகிறது. அறிவு ஜீவிகளாகிய உங்களுக்கு தெரியாததையா நான் கூறப்போகிறேன்? இருந்தாலும் என்னுடைய சிறிய மூளைக்கு எட்டிய ஒரு கருத்தை தங்களுக்கு தெரிவிக்கிறேன். அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும்
தனி நபர்களின் பெயர்களை அறவே ரத்து செய்துவிட்டு அந்தக் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை மட்டும் அறிவிக்கவேண்டும்.
தேர்தல் நடந்து முடிந்தபின்னர் எண்ணப்படும் மொத்த ஒட்டு எண்ணிக்கையின் படி அந்தந்தக் கட்சிகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் தேர்தல் கமிஷனர் அந்தந்தக் கட்சிகளுக்கு ஏற்பட்ட
வேட்பாளர்கள் எண்ணிக்கையை அறிவித்து விட வேண்டும். அதன்பிறகு
அந்தந்தக் கட்சிகள் அதற்கு ஏற்ப தங்களது வேட்பாளர்கள் அதாவது
சட்டசபை உறுப்பினர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின்
பெயர்களை அறிவிக்கலாம். இவ்வாறு ஒரு ஏற்பாடு ஏற்படுவதின் மூலம்
தேர்தலுக்கான செலவை தனி நபர்கள் காட்டவேண்டியது இல்லை. அந்தந்தக் கட்சிகளே செலவுப் பட்டியலை சமர்ப்பிக்க முடியும்.
மேலும் கட்சித் தாவல்கள் ஏற்பட வாய்ப்பு அறவே இல்லை. கட்சியின் கொள்கைக்கு விரதமாக ஒரு உறுப்பினர் செயல்பட்டால் அவரை நீக்கி
விட்டு அந்தக் கட்சி வேறொரு நபரை நியமிக்க வழி பிறக்கும். மேலும்
ஒரு பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது சட்டசபை உறுப்பினரோ
திடீர் மரணம் அடைந்துவிட்டால் இடைத்தேர்தலுக்கும் அவசியம் இல்லை. அந்த குறிப்பிட்ட நபருக்குப் பதிலாக வேறொரு நபரை அந்தக்
கட்சி நியமிக்கமுடியும் . மேலும் 51 ஒட்டு வாங்கிய ஒரு நபர் வெற்றி
பெற்றதாக அறிவிக்கப்படும் பொழுது 49 ஓட்டுக்கள் வாங்கிய நபரின்
வாக்குகள் இன்று செல்லாததாக ஆகிறது. இந்த தவறையும் ஒழித்துக்
கட்டலாம். மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் தனிப்பட்ட நபரின் செல்வாக்கு அழிக்கப்பட்டு கட்சிகளின் செல்வாக்கே மேலோங்கி நிற்கும்.
அதன்மூலம் தனிநபர் பகைமைகள் அழிந்துவிடும். மேலும் பெண்களின்
தொகுதிகள் என்றும் ரிசர்வ் தொகுதிகள் என்றும் அறிவிக்க வேண்டியது
இல்லை. தேர்தல் முடிவிர்க்குப்பின் அந்தந்தக் கட்சிகள் அவரவர்களுக்குக் கிடைத்த எண்ணிக்கையின் அடிப்படையில் அந்த
சத விகிதத்தின் அடிப்படையில் அந்தக் கட்சிகளே பெண்களையும்
ரிசர்வ் வகுப்பினரையும் அறிவிக்கலாம். இந்த முறை மூலம் கட்சிக்குத்
தான் ஓட்டே தவிர குறிப்பிட்ட தனி நபருக்கு அல்ல என்ற நிலைமை
உருவாகும். இதன் மூலம் ஒரு கட்சிக்குள்ளேயே ஏற்படும் ஒரு நபருக்கு
ஒரு நபர் பகைமை அறவே அழிந்துவிடும். மேலும் பொது மக்கள் போடும்
ஓட்டுக்கள் அனைத்தும் உரிமை பெற்று விடும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டிலுமே தேர்தலில் போட்டியிட வசதி என்பதால் சுயேச்சைகளின் குறுக்கீடு அறவே தவிக்கப் படும். மேலும் போட்டி போட்டுக்கொண்டு ஒரு சில தொகுதிகளில் அளவுக்கும் அதிகமாக
தேர்தல் சின்னங்களே போதாத அளவிற்கு 100 பேர் 200 பேர் என்று
போட்டியிடும் கின்னஸ் சாதனை என்ற அவலம் அறவே நீங்கும்.
நமது ஜனநாயக முறையில் சுயேச்சைகள் போட்டி இடுவதை தடை
செய்ய முடியாது என்று இருக்குமானால் அதற்கும் ஒரு நிபந்தனை
விதிக்கலாம். அதன்படி குறிப்பிட்ட அந்த தனி நபர் அந்த தொகுதியில்
பெரும் வாக்கு அந்த தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கையில் 2
சத விகிதத்திற்கும் குறைவாக இருக்குமானால் அவருக்கு 5 வருட சிறை
தண்டனை விதிக்கலாம். அதாவது சட்டசபை அல்லது பாராளுமன்ற
காலத்திற்கு அவர் சிறையில் வாழ்க்கையை கழிக்கட்டும். இதனை தேர்தல் கமிஷன் வெளிப்படுத்தினால் கண்டிப்பாக எந்த சுயேச்சையும்
போட்டியிட துணிய மாட்டார்கள். இந்த முறையை சட்டசபை , பாராளுமன்றம் ஆகிய வற்றிற்கு மட்டும் பயன்படுத்திவிட்டு உள்ளூர்
தேர்தலுக்கு அதாவது கார்போரஷன் முனிசிபாலிட்டி மற்றும் பஞ்சாயத்து ஆகியவைகளுக்கு நடக்கும் தேர்தலில் அரசியல்
கட்சிகள் எதுவும் போட்டி யிட தடை விதிக்க வேண்டும் அதன்மூலம் அந்தந்த உள்ளூரில் உள்ள சேவை மனப்பான்மை உள்ள நபரை மட்டும் பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு
அவர்களுக்கு கிட்டும். இதன் மூலம் ஜனநாயகத்தின் அஸ்திவாரம் மிகவும் பலமானதாக அமையும்.
இதுதான் இப்போதைக்கு என் சிறிய அறிவிற்கு எட்டிய யோசனை.
அறிவு ஜீவியாகிய உங்களுக்கு இதை விட மேலும் பல யோசனைகள் தோன்றக்கூடும்.
இப்படிக்கு,
அப்புக்குட்டன் நம்பியார்.Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends