Announcement

Collapse
No announcement yet.

அழகர் கோயில் தோசை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அழகர் கோயில் தோசை

    மஹாளபக்ஷம் - பலகாரம்

    தேவையான பொருள்கள்:

    பச்சரிசி - 3 கப்
    கருப்பு உளுத்தம்பருப்பு – 2 கப் (தோலுடன்)
    மிளகு – 2 டீஸ்பூன்
    சுக்குப் பொடி - 1/4 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நெய், உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    அரிசியை ஊறவைத்து நீரை வடித்து வறட்டு மாவாக, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். (கோயிலில் இதை உரலில் போட்டு இடிப்பதற்காக ஆட்களை நியமித்திருப்பார்கள்.)

    உளுந்தை இரண்டு மூன்று முறை களைந்து கொள்ளவும். பாதி அளவு தோலை மட்டும் நீக்கிவிட்டு, மீதியை அதிலேயே சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    தேவையான உப்பு, அரிசி மாவோடு கலந்து 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். (கோயிலில் காலையில் அரைத்து இரவில் செய்வார்கள்.) இந்தக் கலவை, தோசை மாவு மாதிரி இல்லாமல் வடை மாவு பதத்தில் கெட்டியாக இருக்க வேண்டும்.மறுநாள் மாவில் சுக்குப் பொடி, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    அடுப்பில் தோசைக்கல் சூடானதும், மாவை சற்று கனமான தோசைகளாக (இரண்டு அங்குல உயரம்) வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு அடுப்பை சிம்’மில் வைக்கவும்.நன்கு சிவந்து மொறுமொறுப்பாக ஆனதும், மறுபக்கம் திருப்பிப் போட்டு, மீண்டும் நெய் விட்டு, சிவக்க மொறுமொறுப்பாக எடுக்கவும்.

    குறிப்பு : அடுப்பு சிம்மில் மட்டுமே இருக்க வேண்டியது முக்கியம்.

    வீட்டில், கொஞ்சம் மென்மையான தோசை வேண்டும் என்று நினனப்பவர்கள், பாதிக்குப் பாதி புழுங்கல் அரிசி சேர்த்துக் கொள்ளலாம். வாசனைக்குப் பெருங்காயமும். இவை இரண்டும் கோயிலில் தவிர்ப்பவை.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: அழகர் கோயில் தோசை

    என்ன இது மாமி. அழகர் கோவில் தோசையும் மற்ற கோவில் தோசையும் ஒன்னேதானா. அது என்ன அழகர் கோவில் தோசை 2 அங்குலம் கனம் இருக்குமா. அதை எப்படி சாப்பிடறது. நான் சாப்பிடத்தது கிடையாது. கேக்கும் போதே நாக்கில ஜலம் ஊரரது. இதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கனும்.அவ்வளவுதான்.

    Comment


    • #3
      Re: அழகர் கோயில் தோசை

      நான் வார்க்கும் போது போட்டோ போடறேன் மாமா, ஆனாலும் ஆத்திலே அவ்வளவு கனமாய் வார்ப்பது கஷ்டம் , என்ன தான் ஆழமமான நான்ஸ்டிக் தோசைக்கல் என்றாலும் ... 2இஞ்ச் கொஞ்சம் கஷ்டம் தான்
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      Working...
      X