இந்த உப்புமா செய்ய அரிசி நொய் என்னும் சின்னக் குருணை அரிசியே பொருத்தமாய் இருக்கும். இல்லை என்றால் அரிசியைக் களைந்து ஊற வைத்துக்கொண்டு மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ, து.பருப்பு, க.பருப்பு சேர்த்து உடைத்துக்கொள்ளவும். 2 கப் அரிசிக்கு 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு போட்டு அரைக்கவும். , மிளகு, சீரகம் தனியாக உடைத்து வைத்துக்கொள்ளவும், கடைசி இல் தேவைப்படும்.

தேவையானவை :

உடைத்த அரிசி அல்லது குருணை (பருப்புகளுடன் ) - 2 cup
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 கப்
ப.மிளகாய் 3 (தேவையானால் )
வற்றல் மிளகாய் 4 -5
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - கொஞ்சம்
தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு எல்லாம் 1 ஸ்பூன் அளவில் எடுத்துக்கோங்கோ
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
உடைத்த மிளகு சீரகம் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

ஒரு நான்ஸ்டிக் அல்லது இலுப்பச்சட்டில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை , பெருங்காயம் எல்லாம் தாளிக்கவும்.
ஒரு கப்க்கு 2 முதல் 2 1/2 கப் தண்ணீர் என்று அளந்து கொண்டு, வாணலி இல் விடவும்.
உப்பு போடவும்.
அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கிவிட்டு, உடைத்து வைத்துள்ள குருணையை அதில் போடவும்.
நன்கு கிளறவும்.
மேலே ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.
அப்பப்போது ஒருமுறை கிளறி விடவும்.
தண்ணீர் தேவையானால் விடவும்.
நன்கு வெந்ததும், தேங்காய் துருவல் மற்றும் மிளகு சீரகம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.
தேங்காய் சட்னி, கத்தரிக்காய் கொத்சு அல்லது வெறும் தயிரு கூட போறும்.

குறிப்பு: தேங்காய் துருவலை வெறும் வாணலி இல் வறுத்தும் போடலாம்