தேவையானவை:

பன்சி ரவை 2 கப்
தக்காளி 1 (தேவையானால் )
இஞ்சி 1 சின்ன துண்டு
பச்சை மிளகாய் 6 -8

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends




தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பச்சைமிளகாய் போடவும்; நன்கு வதக்கவும், கொஞ்சம் வெந்து இருக்கும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பன்சி ரவையை கொட்டி கிளறவும்.
நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
ரவை நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்.
நல்ல சுவையான 'பன்சி ரவா உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.

குறிப்பு: கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் போட்டும் செய்யலாம். பன்சி ரவை என்றால் சோள ரவை; இது பெங்களூரில் ரொம்ப பிரபலம்