Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 25 அரைக்கணமாவது அரங்க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 25 அரைக்கணமாவது அரங்க

    திருவரங்கத்தந்தாதி 25 அரைக்கணமாவது அரங்கனை நினை !

    அரைக்கலைவேலையுடுத்தமண்பல்பகலாண்டுபற்றல்-
    அரைக்கலைவேலையுடைவேந்தர்வாழ்வெண்ணலைவரையும்
    அரைக்கலைவேலையவர்க்கேபுரிவையென்றாலுனெஞ்செ
    அரைக்கலைவேலையரங்கனுக்காட்படவாதரியே

    பதவுரை : வேலை என்றால் என்ன ( கடல் / ஆயுதம் / பணி / நேரம் ) ?

    நெஞ்சே மனமே !
    அரைக்கு இடையினில்
    அலை வேலை உடுத்த அலைகளை உடைய கடலை ஆடையாக தரித்த
    மண் பூமியை
    பல்பகல் ஆண்டு நெடுங்காலம் அரசாண்டு
    பற்றலரை கலை பகைவர்களை நிலை குலைய வைக்கும்
    வேலை உடை வேலாயுதத்தை உடைய
    வேந்தர் அரசர்களுடைய
    வாழ்வு நிலையற்ற வாழ்க்கையை
    எண்ணல் ஒரு பொருட்டாக கருதாதே !
    ஐவரையும் ஐந்து இந்திரியங்களையும்
    அரைக்கலை அடக்காமல்
    அவர்க்கே அவைகளுக்கே அடிமையாக
    வேலை புரிவாய் என்றாலும் பணி செய்வாய் என்றாலும்
    அரை கலை வேலை அரைக் கண நேரமாவது
    அரங்கனுக்கு ரங்கநாதனுக்கு
    ஆட்பட ஆதரி அடிமை செய்ய விரும்பு !
    Last edited by sridharv1946; 07-05-17, 17:16.
Working...
X