திருவரங்கத்தந்தாதி 27 அரங்கனின் அஷ்டாக்ஷரமே அன்புடன் அருளும் !
அடையப்பன்னாகங்கடிவாயமுதுகவங்கிகுளிர்
அடையப்பன்னாகமருப்பாயுதமிறவன்றுகுன்றால்
அடையப்பன்னாகமிசைதாங்கப்பாலற்கருள்செய்ததால்
அடையப்பன்னாகங்கரியானரங்கனெட்டக்கரமே.
பதவுரை : நாகம் - பாம்பு / யானை / மலை ?
ஆல் அடை அப்பன் ஆலிலையில் பள்ளி கொண்ட தலைவனும்,
ஆகம் கரியான் திருமேனி கருத்திருப்பவனுமான
அரங்கன் ரங்க நாதனுடைய
எட்டு அக்கரம் எட்டு அக்ஷரமான திரு மந்திரம்
பல் நாகம் விஷப் பற்களை உடைய பாம்புகள்
அடைய கடி வாய் முழுவதும் கடித்த இடத்தில்
அமுது உக அமுதம் சிந்தவும்,
அங்கி குளிர் அடைய அக்கினி குளிர்ந்து போகவும்,
பல் நாகம் பல யானைகளின்
மருப்பு ஆயுதம் தந்தங்களாகிய ஆயுதங்கள்
இற உடையவும்,
குன்றால் அடை மலையில் உள்ள
அப்பு நீர்
அந்நாகம் மிசை தாங்க அந்த மலை மீது ஏந்தவும்
பாலற்கு சிறுவனான பிரஹ்லாதனுக்கு
அன்று அப்போது
அருள் செய்தது கருணை புரிந்தது
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks