Announcement

Collapse
No announcement yet.

"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • "பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்.

    "பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..


    பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை"அட்மிட்" செய்வதில்லை. எனவேகால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

    "பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..

    1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா.. ..???
    இந்த அறிகுறி
    விஷப்பாம்பு கடி அல்ல...

    2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா.. ..??? கடித்த இடம் சற்றுதடித்து(வீங்கி)
    காணப்படுகிறதா.. ?? கடுமையான வலி இருக்கிறதா..???

    இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும். ..
    முதலுதவி:-

    1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

    2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

    3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது . அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

    4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல்முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகி றது

    4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துக ின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம ்.

    5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

    6.பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை"அட்மிட்" செய்வதில்லை. எனவேகால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

    7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம்.

    கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.
    பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...
    கிடைத்த தகவலை பகிர்ந்துள்ளேன் ...!!!


    Source:harikrishnamurthy


    Please also read from this link to know more about First Aid etc in case of snake bite

    http://puthumanaikpm.blogspot.com/2013/02/blog-post_8.html

Working...
X