பெரியவாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

எதிரே, ஒரு பெரிய மரம். தடிமனான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது. பின், இருபது - முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கைத் தொடர்ந்து மரத்தில் ஏறின.

பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போடச் சொன்னார்கள்.

லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை! ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு மேலே ஏறிச் சென்றன.லீடர் குரங்கு மட்டும் ஒரு பழத்தைக் கூட தொடவில்லை!


பெரியவாள் சொன்னார்கள்:


குரங்குகள் போன்ற மிருகங்களுக்குக் கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன. காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும்.அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும்.ஒரு கட்டெறும்பு செத்துப்போனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.ஒரு காக்கை இறந்துபோனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்து கொண்டு துக்கமாய் கதறும்.


ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னைப் பார்த்து நீங்கள் எல்லாம் ஆச்சார்யாள், பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்யமுடிகிறதில்லை!


கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த பக்தர்கள்,ஒரே குரலாக, பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம் என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.


சரி. காலையில் இரண்டு நிமிஷமும், சாயங்காலம் இரண்டு நிமிஷமும் எனக்காக ஒதுக்குங்கள். இருபத்து நாலு மணி நேரத்தில், நாலு நிமிஷம்தான் கேட்கிறேன். காலையில், இரண்டு நிமிஷம் ராம, ராம என்று சொல்லுங்கோ; சாயங்காலம், சிவ, சிவ ன்னு சொல்லுங்கோ


அப்படியே செய்கிறோம் என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.

அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், பத்துப் பன்னிரண்டு பேர்களாவது, சொன்ன சொல்லைக் காப்பாத்துவா என்றார்கள்.

அந்த, யாரோ பத்துப் பன்னிரண்டு புண்யாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான், ஆழமான கருத்துடன், அரைமணி லெக்சர்!


குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு , காக்கை - நமக்கு நல்ல வழிகாட்டிகள்; ஆச்சார்யர்கள்.

அவர்களை (அவைகளை)யாவது follow பண்ணலாம் தானே?

In EnglishPeriyavaal was giving darshan to devotees. There was a big tree near by. A huge monkey (leader) came and climbed the tree, followed by 20 30 monkeys.

Periyavaa told a basket of mangoes be thrown under the tree. Somehow all the monkeys in the group came one by one, took one mango each and climbed back, as if it was their leaders order. The leader monkey did not touch the fruit.


Periyavaa told:


Even animals like monkeys also follow a discipline. They follow their leaders order. In the forest, elephants have a head. All the elephants follow their leader while moving. If an ant dies, other ants carry the dead. If a crow dies, all others mourn near the dead.


But, we, mankind only do not follow what our Guru says. All of you call me Achaaryal, Guru, etc. But you are not able to follow what I say.


Those who were present there sincerely replied in one voice We will do whatever Periyavaa instruct us

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsOk. Daily set aside two minutes in the morning and two minutes in the evening for me. In a day of 24 hours, I am asking only four minutes. In the morning, chant Rama, Rama for two minutes and in the evening, chant Siva, Siva for two minutes

Around 100 devotees present there said We will do as you say

After that, Periyavaa told the devotees sitting near by At least 10 12 people will keep up their word All these half an hour lecture was given, for those unknown 10-12 blessed souls!


Monkey, Wild Elephant, Ant, Crow all are our Achaaryargal Atleast, we can follow them, cant we?

Thanks to Smt Kala for typing and translation.


source:mahesh