திருவரங்கத்தந்தாதி 29 அடியார்க்கு அடிமை ஆக்கும் அரங்கன் அடியே ஆரமுது !
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
ஆக்குவித்தார்குழலாலரங்கேசரன்பால்விதுரன்
ஆக்குவித்தாரவடிசிலுண்டார்கடலாடையகல்-
ஆக்குவித்தாரறிவற்றேனைத்தம்மடியார்க்கடிமை
ஆக்குவித்தாரடியேயடியேன்றுய்க்குமாரமுதே
பதவுரை :
குழலால் தனது வேய்ங்குழல் இன்னிசையால்
ஆ குவித்தார் பசுக்களைக் கூட்டினவரும் ,
விதுரன் தனது பக்தனான விதுரன்
ஆக்கு தயார் செய்த
வித்தார அடிசில் விசேஷ உணவை
அன்பால் உண்டார் பாசத்துடன் உண்டவரும் ,
கடல் ஆடை அகலா கடல் ஆகிய ஆடையை நீங்காத
கு பூமியை உண்டாக்குவதற்கு
வித்தார் விதை போல காரணமானவரும்
அறிவு அற்றேனை அறிவு இல்லாத என்னை
தம் அடியார்க்கு தனது அடியவர்களுக்கு
அடிமை ஆக்குவித்தார் அடியவன் ஆகும்படி அருள் செய்தவருமாகிய
அரங்கேசர் ரங்கநாதருடைய
அடியே திருவடிகளே
அடியேன் துய்க்கும் தாசனாகிய நான் அனுபவிக்கும்
ஆர் அமுது அருமையான அமிர்தம் ஆகும் .
Bookmarks