திருவேங்கடத்தந்தாதி 31 அரங்கனுக்கு ஆள் படுங்களேன் !
அமரவரம்பையினல்லார்பலரந்திக்காப்பெடுப்ப
அமரவரம்பையில்வேல்வேந்தர்சூழமண்ணாண்டிருந்தோர்
அமரவரம்பையில்கான்போயிறந்தராதலில்வீடு
அமரவரம்பையின்மஞ்சாரரங்கருக்காட்படுமே.
பதவுரை : அமர - ( தேவ லோகத்து / போர் / இருக்க / அடைய ) ?
அமர அரம்பையின் தேவ லோகத்தின் ரம்பையைக் காட்டிலும்
நல்லார் பலர் அழகிய பெண்கள் பலர்
அந்திக்காப்பு எடுப்ப திருவந்திக் காப்பு எடுக்கவும் ,
அமர போர்க்கு உரியதும்
அரம் பையில் அரத்தால் கூர் தீட்டப்பட்டதும் ,
வேல் வேந்தர் சூழ அமர வேலை ஏந்திய அரசர்கள் கூட இருக்கவும் ,
மண் ஆண்டு இருந்தோர் நிலவுலகத்தை அரசாண்டு வந்தவர்கள் எல்லோரும்
வரம்பை இல் எல்லை இல்லாததான
கான் போய் இறந்தனர் வனத்திற்கு சென்று மாய்ந்தனர்.
ஆதலில் ஆகையால்
வீடு அமர நீங்களும் பரம பதம் அடைய
அரம்பையில் (உயரமான !) வாழை மரத்தில்,
மஞ்சு ஆர் மேகங்கள் தங்கும்
அரங்கருக்கு ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்க நாதருக்கு
ஆள் படும் அடிமை ஆகுங்கள்.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks