யாகம், யக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன? எந்த சமயங்களில் செய்தல் வேண்டும்?

யஜ் என்பது வியாகரண அதாவது இலக்கணத்தில் வரும் வினைச்சொல் ஆகும்.

1. இறைவனுக்கு செய்யப்படும் பூஜைகள்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends2. இறைவனுக்கு மந்திரம் சொல்லி, தீயில் வரவழைத்து அவருக்கு பிடித்தமான பொருட்களை அக்னியின் மூலமாக அர்ப்பணித்தல்.

3. இவர்களும் இறைவனை உடம்பில் வைத்துள்ளவர்கள்தான் என்ற பாவனையோடு ஒருவருக்கு அவரை காக்க உதவுகின்ற பொருட்களை தானமளித்தல்.

4. எங்குமே இறைவன்தான் என்ற பாவனை கொண்டு சத்திரம், சாவடி, சுமைதாங்கி, கல்வி நிலையம், பிணி நீக்குமிடமான மருத்துவமனை அமைத்தல்.

இவை நான்குமே யஜ் என்ற வினைச்சொல்லின் விளக்கங்கள்தான். இதைத்தான் தேவபூஜா ஸஸ்கதிகரண யஜன தானேஷூ யஜ் என்பதாக சொல்லப்படுகிறது. தமிழில் இதை வேள்வி என அழைக்கிறோம். நாம் சம்பாதித்த பொருட்களை சுற்றத்தாருக்கும் கஷ்ட நிலையில் உள்ளவருக்கும் கொடுத்து உதவுவது கூட யாகம்தான் என்பது என் கருத்து.


Source:hari krishnamurthy